• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒட்டுமொத்த இந்தியாவையும் அசர வைத்த பினராயி விஜயன்.. சபாஷ் "சபா டிவி".. இனி எல்லாமே "லைவ்" தான்

|

சென்னை: மறுபடியும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் பினராயி விஜயன்.. சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஒரு சேனலை தொடங்கிவிட்டார்.. நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் தான் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

எப்போதுமே கேரளா எல்லாவற்றிலும் ஸ்பெஷல்தான்.. எத்தனை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக இருந்து கொண்டே இருக்கிறது என்பதை ஏற்று கொண்டே ஆக வேண்டும். அதனால் பல மாநில மக்களும் கேரளாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உற்று கவனித்தபடியே உள்ளனர்.

kerala gov starts a new channel for assembly proceedings in sabha tv

யார் கண்ணு பட்டதோ, திடீரென அந்த மாநிலம் பல பிரச்சனையில் சிக்கி கொண்டது.. மறுபடியும் கொரோனா தொற்று அதிகரிப்பு, நிபா வைரஸ், நிலச்சரிவு என சவால்களை மீறி கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் இன்னொரு அதிரடியை செய்துள்ளது.

அதன்படி, நாட்டிலேயே முதல் முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது... அந்த சேனலுக்கு பெயர் "சபா டிவி".. இதற்கான திறப்பு விழாவும் நடந்து முடிந்தது.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.. இந்த சட்டப்பேரவைக்கான வெப்சைட்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதை பற்றி பினராயி விஜயன் சொல்லும்போது, குறித்து "மாநிலத்திற்கான மதிப்பை பெருமிதத்துடன் உணரும் தருணம் இது.. நாட்டிலேயே சட்டமன்றத்திற்கு என தனியாக ஒரு சேனல் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.. நாடாளுமன்றமும், மக்களாட்சியும் நிலைநிற்கும் ஒவ்வொரு நாட்டிலும் சபை நடவடிக்கைகள் மக்களுக்குச் சென்று சேர வேண்டியது மிகவும் முக்கியமானது.

ஜனநாயகத்தின் ஆட்சி நீடிக்கும் இந்த கேரள மாநிலத்தில் அரசின் ஆட்சி வெளிப்படையாக இருக்க வேண்டும்.. இங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்" என்றார்.

  Gold Smuggling | Kerala அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள் |Swapna Suresh |Saritha Nair

  பொதுவாக, மத்திய அரசுக்கு லோக்சபா டிவி சானல் சேனல் இருக்கிறதே தவிர, மாநிலங்களிலுள்ள சட்டசபைகளில் நடக்கும் விவாதங்கள், உறுப்பினர்களின் பேச்சுகளை ஒளிபரப்ப, தனியாக சேனல் ஒன்று கிடையாது.. முன்பெல்லாம் சட்டசபை கூடினால், அன்றைய நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரத்யேகமாக வெளியாகும்.

  கேள்வி-பதில், மான்ய கோரிக்கை மீதான விவாதம் என்றாலும்கூட, அதை தனியாக பிரசுரிக்கப்படும். அதற்கு பிறகுதான் சேனல்கள் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், நிகழ்வுகளை வெளிக்காட்ட தொடங்கியது. இப்போது அடுத்த கட்டத்துக்கு கேரளா சென்றுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது.. மொத்த நிகழ்வுகளையுமே மக்கள் பார்க்கும்படி வகை செய்யப்பட்டுள்ளது.. இது நிச்சயம் இளைய தலைமுறைக்கு பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

   
   
   
  English summary
  kerala gov starts a new channel for assembly proceedings in sabha tv
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X