• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சோனாவை வாட்டிய தனிமை.. கரெக்டாக கிடைத்த மகேஷின் அரவணைப்பு.. திடீர்னு.. ஜில்லிட வைக்கும் சம்பவம்!

|

சென்னை: வாட்டிய தனிமைக்கு, மகேஷின் அரவணைப்பு சோனாவுக்கு பெரிய பலத்தை தந்தது.. ஒரே அப்பார்ட்மென்ட்டில் "லிவிங் டூ கெதர்" என்றிருந்த வாழ்க்கை சோனாவின் உயிரையே பறிக்க காரணமாகிவிட்டது!

கேரளா மாநிலம் முவட்டப்புழாவை சேர்ந்த பல் டாக்டர்தான் சோனா.. 30 வயதாகிறது.. கல்யாணம் ஆகிவிட்டது.. ஆனால் கணவரை 2 வருஷத்துக்கு முன்பே பிரிந்துவிட்டார்.

Kerala Young Woman Doctor Sona Murder Case Solved

இவரது ஆண் நண்பர் மகேஷ்.. 2 பேரும் ஒரு பிளாட்டில் தனியாக வசித்து வந்தனர்.. கல்யாணம் ஆகவில்லை.. ஆனால் லிவிங் டூ கெதர்.. மகேஷூடன் சேர்ந்து குட்டநெல்லூர் பகுதியில் ஒரு டென்டல் கிளீனிக்கை சோனா நடத்தி வந்திருக்கிறார்.

அந்த கிளீனிக்கில் சோனாவுக்கு நல்ல வருமானம் வந்துள்ளது.. கேள்வி கேட்க கணவனும் இல்லாததால், சோனாவிடம் நிறைய முறை பணத்தை வாங்கி இஷ்டத்துக்கும் செலவு செயது வந்திருக்கிறார் மகேஷ்.. பணம் காய்க்கும் மரமாகவே நாளடைவில் மாறி போனார் சோனா.. பல லட்சம் மகேஷிடம் ரூபாயையும் இழந்தார்!

ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டு வருகிறேனோ என்ற சந்தேகம் சோனாவுக்குள் எழுந்தது.. அதனால் இதுவரை தந்த பணத்தை பற்றி மகேஷிடம் கேட்டுள்ளார்.. அப்போதுதான் மகேஷின் சுயரூபம் சோனாவுக்கு தெரியவந்தது... அதிர்ச்சியால் உறைந்து போன சோனா, மகேஷ் மீது போலீசில் பண மோசடி புகார் தந்தார்.

இது தெரிந்து ஆவேசமான மகேஷ், இனி உயிருடன் சோனாவை விட்டால் ஆபத்து என்று கொலை செய்ய முடிவு செய்தார்.. அதன்படி கடந்த 29-ம் தேதி கிளீனிக்கிற்குள் நுழைந்து சோனாவை கத்தியால் பல இடங்களில் குத்திவிட்டார்.. ரத்த வெள்ளத்தில் சோனா சுருண்டு அங்கேயே விழுந்தார்.. அருகில் இருந்தோர் சோனாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் வயிறு பகுதியில் ஆழமான கத்திகுத்துகள் நிறைய இருந்தன.. கடைசிவரை சோனாவை காப்பாற்றவும் முடியவில்லை... ஞாயிற்றுகிழமை பரிதாபமாக சோனாவின் உயிர் பிரிந்தது.. இதற்கு பிறகு மகேஷை தேடி பிடித்த போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்..

இயல்பிலேயே சோனா கொஞ்சம் படைத்தவரும்கூட.. இதுதெரிந்துதான் பழகவே ஆரம்பித்துள்ளார் மகேஷ்.. அடிக்கடி சோனாவுக்கு உதவுவதுபோல் நடித்துள்ளார்.. போலியான நட்பை உதிர்த்துள்ளார்.. காதலான நட்பை பிரயோகித்துள்ளார்.. கணவனை இழந்து தனிமையில் தவித்த சோனாவுக்கு மகேஷின் நட்பு ஆறுதலை தந்தது.. அதனாலேயே அவரை அதிகமாக நம்பி பணத்தை இழந்துவிட்டார்.

தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்.. கற்பூரத்தை, ஏற்றி, தேங்காயை உடைத்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள்!

அதாவது 2 வருஷத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 22 லட்சம் ரூபாய் வரை சோனாவிடமிருந்து மகேஷ் கறந்திருக்கிறார். இப்போதுகூட இந்த தகராறு வந்திருக்காது.. கை செலவுக்கு சோனாவுக்கு திடீரென பணம் தேவைப்பட்டிருக்கிறது.. அதை கேட்க போனபிறகுதான் விவகாரமே வெடித்திருக்கிறது.

மகேஷ் இதுபோல எத்தனை பெண்களை இதற்கு முன்பு ஏமாற்றியிருக்கிறார் என்பது தெரியவில்லை.. ஆனால் தன்னை மகேஷ் காதலிக்கவே இல்லை என்பது தெரிந்துதான் சோனா அதிக அளவு மனம் உடைந்து போயிருக்கிறார்.. தொடர் விசாரணை இப்போது நடந்து வந்தாலும், ஒரு பெண் கணவனை பிரிந்து தனித்து வாழ்வது என்பது பெரிய சவாலான விஷயம்தான்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Kerala woman doctor murder case solved
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X