சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத் டிரெய்லர்தான்... மெயின் பிக்சரை தமிழ்நாட்டுல பாப்பீங்க... சொல்றது யாருனு பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பல வார்டுகளில் முன்னணி பெற்றதன் மூலம் தென்னிந்தியாவில் பாஜகவால் காலூன்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் எனவும் அண்மையில் அக்கட்சியில் சேர்ந்த குஷ்பூ தெரிவித்தார்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியின் டிஆர்எஸ் 58 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது

Khushboo says BJP will face the victory soon

மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பிடித்த பாஜக 40 இடங்களில் முன்னிலை வகித்து பெரும் எழுச்சி கண்டுள்ளது. இது தமிழக தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டம் என சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்து உள்ளார்.

Khushboo says BJP will face the victory soon

இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறுகையில், பாஜகவால் தென்னிந்தியாவில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வெற்றியே இதற்கு சான்று. நமக்கு(பாஜக) தமிழ்நாடு வெகு தொலைவில் இல்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 2021 தமிழக தேர்தலில் மிகப்பெரிய வளர்ச்சி பெறுவோம். தொடர்ந்து நம்புங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, அவருடைய நேர்மையான அரசு என டேக் இணைத்து குறிப்பிட்டு உள்ளார் நடிகை குஷ்பு.

பீகாரை போல ஓவைசி கட்சியால் ஆதாயம் அடைய நினைத்த பாஜகவின் 'ஹைதராபாத் கனவு' டமால்! பீகாரை போல ஓவைசி கட்சியால் ஆதாயம் அடைய நினைத்த பாஜகவின் 'ஹைதராபாத் கனவு' டமால்!

குஷ்பு கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Khushboo said he was hopeful that the BJP would be able to gain a foothold in South India by winning several seats in the Hyderabad municipal elections and that the BJP would win a landslide victory in the Tamil Nadu assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X