சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீல் சேர் கூட வைத்திருக்க மாட்டீர்களா.. ட்வீட் போட்டு விமர்சித்த குஷ்பு! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

விமான நிலையத்தில் வீல் சேர் கூட வைத்திருக்க மாட்டார்களா என குஷ்பு கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஏர்போர்ட்டில் வீல் சேர் வசதி கூட இல்லாத நிலையில் தான் வலியுடன் அரைமணி நேரம் காத்திருந்ததாக நடிகை குஷ்பு வேதனையான ஒரு பதிவை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

1990 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு வெளியான வருஷம் 16 படத்திலும் இவர் நடித்திருந்தார்.

பின்னர் மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னத்தம்பி உள்ளிட்ட படங்கள் குஷ்புவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கும் இயக்குநர் சுந்தர் சி-க்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார் ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார்

இரு மகள்கள்

இரு மகள்கள்

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். சினிமா, சின்னத்திரை, ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவது, நடன நிகழ்ச்சிகளில் நடுவர் உள்ளிட்டவைகளில் முத்திரை பதித்த குஷ்பு, அரசியலிலும் கால் பதித்துள்ளார். அவர் முதல் முதலில் 2010ஆம் ஆண்டு திமுக இணைந்தார். அங்கு நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர் திமுகவிலிருந்து வெளியேறினார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

பின்னர் காங்கிரஸ் கட்சியில் 2014 ஆம் ஆண்டு இணைந்தார். அங்கு இருந்து கொண்டு பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார். பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை விமர்சித்திருந்தார். இதையடுத்து அங்கும் அதிருப்தியில் இருந்த குஷ்பு திடீரென 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

தேசிய குழு உறுப்பினர்

தேசிய குழு உறுப்பினர்

தற்போது அங்கு தேசிய குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனிடம் தோல்வி அடைந்தார். தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் குஷ்புவுக்கு அண்மையிில் காலில் காயம் ஏற்பட்டது.

காலில் காயம்

காலில் காயம்

காலில் கட்டுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் குஷ்பு வெளியூர் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகை குஷ்பு, ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் ஏர் இந்தியாவை டேக் செய்து குஷ்பு கூறுகையில் முழங்காலில் காயத்துடன் வரும் நோயாளியை அழைத்து செல்ல அடிப்படைத் தேவையான சக்கர நாற்காலியை கூட வைத்திருக்க மாட்டீர்களா.

 மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

கால் வலியுடன் சக்கர நாற்காலிக்காக 30 நிமிடங்கள் காத்திருந்தேன், பின்னர் வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை உள்ளே அழைத்து சென்றனர், இனியாவது சேவையை நன்றாக செய்வீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் இதற்காக நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

English summary
Actress turned Politician Khusbu Sundar made allegations on Air India that they even dont have wheel chair for knee injury patient. She had waited for half an hour for wheel chair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X