சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு

பெண்களை இழிவு படுத்தும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் என்றும் கூறியுள்ளார் குஷ்பு.

Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார், மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார் என்று குஷ்பு கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரா என்றும் குஷ்பு கேட்டுள்ளார்.

பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீதான குற்றச்சாட்டு. திருமாவளவன் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

மாநிலம் முழுவதும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் கொடும்பாவி எரிக்கப்பட்டது. பாஜகவினருக்கு எதிராக போராடிய விசிகவினர் மீது தடியடி நடத்தப்பட்டது.

"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா?" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு

திருமாவிற்கு எதிரான போராட்டம்

திருமாவிற்கு எதிரான போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

கைதான குஷ்பு

கைதான குஷ்பு

தடையை மீறி சிதம்பரத்திற்கு காரில் கிளம்பினார் நடிகை குஷ்பு. அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர். குஷ்புவை வேனில் ஏற்றி கேளம்பாக்கம் தனியார் விடுதியில் தங்க வைத்தனர். அங்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குஷ்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

திருமாவளவனுக்கு எதிரான போராட்டம்

திருமாவளவனுக்கு எதிரான போராட்டம்

காலையில் கைதான குஷ்பு மாலையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி உயர்வாக பேசியுள்ள பகுதிகள் அண்ணன் திருமாவளவனுக்கு தெரியவில்லை. பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம் என்று கூறினார் குஷ்பு.

பெண்களை மதிக்க வேண்டும்

பெண்களை மதிக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பு தேவை

பெண்களுக்கு பாதுகாப்பு தேவை

திருமாவளவன் கூறியுள்ள கருத்து இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் எதிரான கருத்து. ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனுதர்மத்தில் உள்ள நல்ல விஷயங்களை படிக்க திருமாவளவன் தவறிவிட்டார் என்றும் சொன்னார் குஷ்பு.

Recommended Video

    'ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா?' பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு
    தேர்தல் நேரத்தில் கடவுள் தேவை

    தேர்தல் நேரத்தில் கடவுள் தேவை

    கொள்கைகளை வீட்டில் இருந்து துவங்க வேண்டும் என்று சொன்ன குஷ்பு, பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார், மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Khushbu has said that God will be where women are respected and God will not be where they are not respected. Khushbu also asked if some people need God only at election time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X