சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். அகில இந்திய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு அதிரடி டிஸ்மிஸ்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: குஷ்பு பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் குஷ்பு. அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இன்று பிற்பகல் இணைய உள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் குஷ்பு கட்சியில் இணைய உள்ளார்.

Khushbu removes as Congress All India Spokesperson

கடந்த மாதம் 29ஆம் தேதி குஷ்பு பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வழக்கம் போல பாஜக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

குஷ்பு வெளிப்படையாக எதையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் அவர் பாஜகவில் இணைவது உறுதியாக இருப்பதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டனர்.

கடந்தவாரம் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசினார் குஷ்பு. 2 ரூபாய் வாங்கிக்கொண்டு ட்விட்டரில் தன்னைப்பற்றி வதந்தி பரப்புவதாக பேசினார் குஷ்பு.

கடந்த வாரம் டெல்லி சென்ற குஷ்பு சோனியாகாந்தியை சந்தித்து பேச முயற்சி செய்தும் அதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அதற்காகவே அவர் டெல்லி சென்றார். அந்த பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து குஷ்பு சென்னை திரும்பினார்.

அதிமுக ஆதரவாளர்- திமுக ஸ்டார் பேச்சாளர்- காங். செய்தி தொடர்பாளர்.. குஷ்பு கடந்து வந்த அரசியல் பாதை அதிமுக ஆதரவாளர்- திமுக ஸ்டார் பேச்சாளர்- காங். செய்தி தொடர்பாளர்.. குஷ்பு கடந்து வந்த அரசியல் பாதை

தனது டெல்லி பயணம் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார் குஷ்பு. இந்த நிலையில் இன்று டெல்லி சென்றுள்ள குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள நிலையில் அவரது கட்சி பதவியை பறித்துள்ளது குஷ்பு.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

English summary
Khushbu has been removed from the post of Congress spokesperson following reports that he is joining the BJP. The announcement was made by the All India Congress Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X