தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி.. மோடி குறித்து என்றோ போட்ட ட்வீட்.. புதிய சிக்கலில் குஷ்பு
சென்னை: மோடி என்ற பெயரை குறிவைத்து பேசியதற்காக ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவையுச் சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, மோடி என்ற பெயரை குறிவைத்து போட்ட பழைய ட்வீட் இப்போது பேசுபொருளாகி உள்ளது.இன்றும் அந்த ட்வீட் அப்படியே இருக்கிறது.. அதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
மோடி என்ற பெயரை குறிவைத்து ராகுல் பேசிய பேச்சுக்காக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக அவரது எம்பி பதவியை லோக்சபா செயலகம் பதவியை பறித்துள்ளது.. வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தியை, எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது லோக்சபா செயலகம். இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியிம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டாலும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எம்.பி. என்ற தகுதியில் மக்களிடம் பேசும் ஒரு எம்.பி. மற்றும் சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறார், எனவே இந்த குற்றத்தின் விளைவுகள் இந்த வழக்கில் மிகவும் விரிவானது. அவருக்கு தண்டனையை குறைப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சமூகத்தில் ஒரு எதிர்மறை செய்தி.அதை மனதில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது" என்று சூரத் நீதிமன்றம் விளக்கம் அளித்திருந்தது.

மோடிக்கள்
தப்பியோடிய தொழிலதிபர்களான நீரவ் மோடி மற்றும் லலித் மோடி ஆகியோருடன் அவர் பகிர்ந்து கொள்ளும் கடைசிப் பெயரைப் பற்றி பிரதமர் மோடியைக் குறிவைத்து,எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான குடும்பப்பெயர் எப்படி வந்தது?" என்று ராகுல் காந்தி கூறியதே இந்த தீர்ப்புக்கு காரணமாக அமைந்தது.பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில் தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டது,

ராகுல் பதவி பறிப்பு
இந்நிலையில் மேல்முறையீடு செய்ய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், ஜாமீனும் அன்றே வழங்கி இருந்தது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தியா முழுவதுமே ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோடி குறித்து குஷ்பு
இந்நிலையில் நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் 2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, லலித் , நீரவ், நமோ என அடுத்தடுத்து மோடி என்ற பெயரை கடைசியாக கொண்டவர்கள் ஊழல்வாதிகள் என்று பொருளில் குஷ்பு ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ள பலர், ராகுலை போல் குஷ்புவுக்கும் தண்டனைவிதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். ராகுலுக்கு எதிராக வழக்கு போட்ட பூர்னேஷ் மோடி, குஷ்புவுக்கு எதிராக வழக்கு போடுவாரா என்று கேள்வி கேட்டு கேட்டு பல காங்கிரஸ் கட்சியினர் அதை பகிர்ந்து வருகிறார்கள்.

ராகுல் குறித்து குஷ்பு
இதனிடையே குஷ்பு சுந்தர் தனது பழைய ட்வீட் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, நீக்கவும் இல்லை. மக்களவையில் இருந்து ராகுல் காந்தி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து குஷ்பு வெளியிட்ட ட்வீட் பதிவில் "துரதிர்ஷ்டவசமாக, நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று சில நாட்களுக்கு முன்பு அவர் (ராகுல் காந்தி) கூறியிருந்தார். அவரது வார்த்தைகள் உண்மையாகிவிட்டன. நேர்மறையாக சிந்தியுங்கள். எதிர்மறையானது உங்களை எங்கும் அழைத்துச் செல்லாது. மன்மோகன் சிங் ஜி 2013 இல் நிறைவேற்றப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வர விரும்பினார். அதை ராகுல் காந்தி துண்டு துண்டாக கிழித்தார். முரண்பாடாக அவரது தகுதி நீக்கம் அதே தீர்ப்பில் இருந்து வருகிறது. இதுதான் கர்மா" என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
-
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications