சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட பெட்டர் சாய்ஸ் இல்லவே இல்லை.. அடித்து கூறும் குஷ்பு

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட பெட்டர் சாய்ஸ் இருக்கவே வாய்ப்பில்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Who is Annamalai ? | Tamilnadu BJP-ன் புதிய தலைவர்

    தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் கே டி ராகவன், சிபி ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.

    ஆனால் யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்தாற் போல் இலவு காத்த கிளிகளுக்கு மத்தியில் தமிழக பாஜக தலைவராக கர்நாடகா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

    அப்போ மட்டும் இனிச்சதாக்கும்.. ஏன் ஒன்றிய அமைச்சர்கள்னு சொல்றதுதானே.. குஷ்பு விளாசல் அப்போ மட்டும் இனிச்சதாக்கும்.. ஏன் ஒன்றிய அமைச்சர்கள்னு சொல்றதுதானே.. குஷ்பு விளாசல்

    தலைவர்கள் காத்திருப்பு

    தலைவர்கள் காத்திருப்பு

    மூத்த தலைவர்கள் காத்திருக்க அண்மையில் கட்சியில் இணைந்த அண்ணாமலையை தலைவராக்கியதில் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

    இளம் வயதில் பதவி

    இளம் வயதில் பதவி

    அதில் அவர் கூறுகையில் இளம் வயதிலேயே அண்ணாமலைக்கு பதவி கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது? பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட பெட்டர் சாய்ஸ் இருக்க வாய்ப்பே இல்லை. அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.

    சட்டம் தெரிந்தவர்

    சட்டம் தெரிந்தவர்

    அவர் நன்கு படித்தவர். அனைத்து சட்டங்களும் தெரிந்தவர். எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார். அவரை தலைவராக நியமித்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். அவருக்கு பதவி கொடுத்ததால் யாருக்கும் அதிருப்தியெல்லாம் கிடையாது என்றார் குஷ்பு.

    மூத்த தலைவர்கள்

    மூத்த தலைவர்கள்

    ஆனால் என்னதான் இருந்தாலும் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. தமிழிசை தெலுங்கானா முதல்வரானதிலிருந்தே பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் மூத்த தலைவர்கள் காத்திருக்கிறார்கள்.

    English summary
    Actress Khushbu says that Annamalai is the best choice for TN BJP President.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X