• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம!

|

சென்னை: கொரோனாவைரஸ் வந்தாலும் வந்தது.. அதைப் பார்த்து பயப்படாதவர்களே இல்லை.. கை குலுக்கி கட்டிப்பிடித்து ஹாய் சொன்னவர்கள் எல்லாம் இப்ப கொஞ்சம் எட்டி நின்னுதான் எதையும் செய்யவே யோசிக்கிறார்கள்.

அதை விட முக்கியாக தனிமைப்படுத்தலின் அவசியத்தையும் மக்கள் இப்போது நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். இதில் வெள்ளைக்கார நாடுகளை விட நம்மவர்கள் ஒரு படி மேல்,. சொன்னவுடன் அதை கப்பென்று பிடித்துக் கொண்டு தனித்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். மேற்கத்திய நாடுகளை விட இதில் நாம் நன்றாகவே ஒத்துழைக்கிறோம்.

இதில் நம் வீட்டுக் குட்டிச் செல்லங்களின் பங்கும் தனியாகவே இருக்கிறது. அவர்களும் முடிந்தவரை விழிப்புணர்வு வீடியோக்களைப் போட்டுக் கலக்கிக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் இதில் பார்க்கிறோம்.

ஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா?.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool!

 சுவேத்திக்காவின் விழிப்புணர்வு

சுவேத்திக்காவின் விழிப்புணர்வு

பெங்களூரைச் சேர்ந்தவர் சுவேத்திக்கா. 8ம் வகுப்பு படித்துள்ளார். இவரது பெற்றோரின் சொந்த ஊர் பெரம்பலூர். ஆனால் தற்போது குடும்பத்துடன் வசிப்பது பெங்களூரில். விடுமுறைக்காக பெரம்பலூர் வந்தவர்கள் இப்போது கொரோனா பிரேக்கால் பெரம்பலூரிலேயே தங்கியிருக்கின்றனர். வந்த இடத்தில் போரடிக்கவே மகளுக்கு சூப்பர் ஐடியா கொடுத்தார் அவரது தாயார் மல்லிகா.. அதுதான் யூடியூப் ஆரம்பிக்கலாமே என்று.

 மாஸ்டர் படப் பாடல்

மாஸ்டர் படப் பாடல்

பிறகென்ன 'Journey with Swethi'என்ற பெயரில் ஒரு யூடியூப் சானலை ஆரம்பித்தார் சுவேத்திகா. நமக்குக் கிடைத்துள்ள பிரேக்கை சரியான முறையில் பயன்படுத்த இசையும் நமக்குக் கை கொடுக்கும். அந்த வகையில் தனிமையாக இருப்பதன் துயரத்தை விரட்டும் வகையில் நல்ல பாடல்களுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் சுவேத்திக்கா.

பாராட்டலாமே

பாராட்டலாமே

கூடவே, தனித்து இருத்தல் போரடிக்கும் விஷயமல்ல.. நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ள உதவும் ஒரு இடைவெளி என்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்தப் பாடலுக்கான வீடியோவை எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரே எடிட்டிங்கும் செய்து பதிவேற்றியுள்ளார்.. பாராட்ட வேண்டிய விஷயம்தான். இளம் தலைமுறையினர்தான் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். பாராட்டுக்கள் சுவேத்திக்கா.

#KidsAreCool.. குவிந்து கொண்டிருக்கும்.. அழகோவியங்கள்.. குட்டீஸ்கள் உலகமே தனிங்க!

 குட்டிப் பெண் சமீக்ஷா

குட்டிப் பெண் சமீக்ஷா

இது நமது வாசகர் பி.சதீஷ் நமக்கு அனுப்பிய அவரது செல்ல மகள் எஸ்.ஜே.சமீக்ஷாவின் அழகுப் படம். பாப்பாவின் கை வண்ணத்தில் அருமையான ஓவியம். பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கிறது. பாப்பா படிப்பது எல்கேஜி.. அழகான ஓவியம்.. அவரைப் போலவே அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது. வாழ்த்துகள்டா!

 ஜெயஷிவானி கலக்கல்

ஜெயஷிவானி கலக்கல்

இதில் இருப்பவர் ஜெய ஷிவானி. இவர்செய்வது உடற்பயிற்சி. இதில் எத்தனை மெசேஜ் இருக்கு பாருங்க. வீட்டில்தானே இருக்கிறோம் என்று சோம்பி உட்கார்ந்து விடாதீங்க அங்கிள்ஸ் அன்ட் ஆண்ட்டீஸ்.. ஏதாவது உடற்பயிற்சி செய்து உடம்பை நல்லா வச்சுக்கங்க என்று சொல்லாமல் சொல்கிறார் இந்த குட்டி தேவதை.. சூப்பர்டா ஜெய ஷிவானி.

 அழகிய தேவதை

அழகிய தேவதை

இது அழகிய யாழினி.. மற்றும் இன்னொரு தேவதை தருணிகாவின் கதை. இருவரும் அக்கா தங்கை. யாழினி 2வது வகுப்பு முடித்துள்ளஆர். தருணிகா யுகேஜி போறாங்க. இருவரும் எவ்வளவு சமர்த்தா டான்ஸ் ஆடியபடி பொழுதைக் கழிக்கிறார்கள் பாருங்க.. அழகுப் பாப்பாக்களா.. டான்ஸில் பெரிய ஆளா வாங்க.. என்ஜாய்!

 கனடாவிலிருந்து சிபிசேரன்

கனடாவிலிருந்து சிபிசேரன்

இது நமது மாஸ்டர் சிபிசேரன் கனடாவிலிருந்து அனுப்பியுள்ளார். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தாலும் சும்மா இருக்கவில்லை சிபி சேரன். வீட்டின் சுவர் எதையும் விட்டு வைக்கவில்லை போலும்.. அழகு அழகாக படங்களை வரைந்து வரைந்து ஒட்டி நிரப்பி வைத்துள்ளார். அட்டகாசமாக இருக்கிறது பார்ப்பதற்கே.. சூப்பர்ப் சிபி சேரன்.. வாழ்த்துகள்.. பத்திரமா இருங்க.

 தர்ஷினியின் ஓவியங்கள்

தர்ஷினியின் ஓவியங்கள்

இதோ இன்னும் ஒரு ஓவியக் குழந்தை. இது தர்ஷினி. 7 வயதாகும் தர்ஷினி 2வது வகுப்பு படிக்கிறார். அப்பா பெயர் ஏ.கந்தசாமி. கொரோனாவைரஸ் தொடர்பான விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் படம் வரைந்து அனுப்பியுள்ளார் தர்ஷினி. பார்க்கவே பிரமாதமாக இருக்கிறது. அருமையா இருக்குடா தர்ஷினி பாப்பா.. வாழ்த்துகள்..!

 லட்டுக் குட்டிகள்

லட்டுக் குட்டிகள்

இது குமரேசன் அனுப்பிய புகைப்படங்கள். இதில் இருப்பவர்கள் அவரது செல்வங்கள்.. ஹரிஸ்மிதா மற்றும் அஞ்சனாஸ்ரீ.. இரண்டும் லட்டுக் குட்டிகள்.. வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டாற் போல இருந்தாலும் கூட அதையும் ஜாலியாக அனுபவிப்பதை அவர்களது சிரிப்பே காட்டிக் கொடுக்கிறது.. சூப்பர்டா லட்டுக்களா!

 இனியவன் பிரதீஷ்

இனியவன் பிரதீஷ்

இது நமது வாசகர் நாகை மாவட்டம் கீழ் வேளூரைச் சேர்ந்த சங்கரநாராயணனின் புதல்வர்கள் இனியவன் மற்றும் பிரதீஷ். இருவரும் வீட்டுக்குள் அடைபட்டாலும் கூட விளையாட்டு அது இது என்று அழகாக டைம் பாஸ் செய்கிறார்கள்.. சமத்துப் பிள்ளைகளான இவர்களையும் வாழ்த்துவோம்.

 சுனில் ஆரோன் பிள்ளைகள்

சுனில் ஆரோன் பிள்ளைகள்

நமது வாசகர் சுனில் ஆரோனின் குழந்தைகள் இவர்கள். இருவரும் ஓவியப் பிரியர்கள் போல. கையில் ஓவியங்களுடன் காட்சி தருகிறார்கள்.. அவர்களே கூட அழகான ஓவியமாகத்தான் தெரிகிறார்கள்.. வாழ்த்துகள் குட்டீஸ்களா!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Readers can send their Photos, videos and other intersting things of their kids for this Special page #KidsAreCool.. some of the snapshots from our readers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X