சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#KidsAreCool.. அப்பா போட்டோ எடுக்க.. அம்மா முடி வெட்டி விட.. குட்டீஸ்கள் ஆட்டம் போட.. அடடா!

Google Oneindia Tamil News

சென்னை: வீடுகள் தோறும் உற்சாகம்தான்.. ஒரு பக்கம் மனசை பயம் போட்டு வாட்டி எடுத்தாலும் கூட. காரணம் இந்த கொரோனாவால் சில நல்லதும் நடந்திருக்கே.

ஒட்டுமொத்த குடும்பங்களும் இப்போது "உண்மையிலேயே" ஒற்றுமையாக ஒரே வீட்டுக்குள் இருக்கும் அதிசயம் கடந்த 10 நாட்களாக நீடித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலைதான். இதனால் யார் அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் தெரியுமா.. குட்டீஸ்கள்தான். தாத்தா பாட்டி அப்பா அம்மா என தனித் தனியாக பார்த்து வந்த அவர்களுக்கு இப்போது மொத்தப் பேரும் ஒட்டுக்காக வீட்டோடு இருப்பது செம மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

அதேபோல பெரியவர்களுக்கும் கூட இந்த ஒற்றுமை பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் என்ஜாய் செய்து வருகின்றனர் மக்கள். எதற்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த லாக் டவுன் உண்மையிலேயே அருமையான ஓய்வைக் கொடுத்துள்ளது.

#KidsAreCool குவியும் குட்டீஸ்களின் சூப்பர் டூப்பர் கலாட்டாக்கள்.. நீங்களும் அனுப்புங்க!#KidsAreCool குவியும் குட்டீஸ்களின் சூப்பர் டூப்பர் கலாட்டாக்கள்.. நீங்களும் அனுப்புங்க!

திருமயம் சத்தீஸ்வரன்

திருமயம் சத்தீஸ்வரன்

இது நமது வாசகர் சத்தீஸ்வரன். சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகும். இவர் தனது குடும்பத்தில் தினசரி நடப்பதை அழகாக விவரித்து நமக்கு புகைப்படத்துடன் அனுப்பி வைத்துள்ளார். கேட்கவே படு ஹேப்பியாக இருக்கிறது. வீடு முழுக்க உற்சாகம் தாண்டவமாடுவதை உணர முடிகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தின் பல குடும்பங்கள் இப்படித்தான் இப்போது ஹேப்பியாக உள்ளன - வீட்டுக்குள் அடைந்து கிடந்தாலும்.

மகிழ்ச்சி வந்தாச்சு.. வீடு இரண்டாச்சு

மகிழ்ச்சி வந்தாச்சு.. வீடு இரண்டாச்சு

எங்கள் வீட்டு குழந்தைகள் விளையாட்டுன்னு வீட்டை 2ஆக்குவதும், நடனம் ஆடுவதும் என்று பொழுதைக் கழித்து வருகின்றனர். அவர்களின் ஆட்டம் பாட்டத்தால் வீடே ஒரே சந்தோஷக் களேபரமாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சத்தீஸ்வரன்.. இதில் வருத்தப்பட என்ன இருக்கு சார்.. இப்படித்தான் இருக்க வேண்டும் வீடு என்றால்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்க

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்க

சத்தீஸ்வரன் மேலும் கூறுகையில், இதில் பெரிய ஹைலைட் என்னவென்றால் என் மனைவி என் மகளுக்கு முடிவெட்டுறேன்னு பேர்ல என் பொண்ண டார்ச்சர் பன்றதுதான். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ, இந்த lock down ல... என்று ஜாலியாக அங்கலாய்த்துள்ளார். மொத்தத்தில் சத்தீஸ்வரன் குடும்பமே இந்த லாக்டவுனை ஹேப்பியாகவும், அதிரடியாகவும் கடந்து கொண்டிருக்கிறது.. மொத்த குடும்பத்துக்கும் வாழ்த்துகள்!

ஓவியம் வரையும் மதிவதனி

ஓவியம் வரையும் மதிவதனி

இது திருநெல்வேலியைச் சேர்ந்த காமாட்சி விஸ்வநாதன் - லட்சுமி பிரியங்கா தம்பதியின் செல்ல மகள் கே.எல். மதிவதனி. 1ம் வகுப்பு ஏ படிக்கிறார். அருமையாக ஓவியங்கள் வரைகிறார்.. இது நமக்காக வரைந்து அனுப்பிய அழகு ஓவியம்.. நல்லாருக்குடா செல்லம்.. வாழ்த்துகள்!

பொழுது போகலையா செல்லம்

பொழுது போகலையா செல்லம்

இது நம்ம வாசகர் நிஜம் பதுருதீன் தனது மகனுடன் இருக்கும் படம். தம்பியைப் பார்த்தால் பொழுதே போகலைன்னு தெரியுது.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ குட்டி.. சீக்கிரம் எல்லாம் சரியாக வீட்டை விட்டு ஹேப்பியா வலம் வரலாம்.. அதுவரைக்கும் Stay at home and stay safe!

அழகுடா தம்பி

அழகுடா தம்பி

இது நமது வாசகர் ஜெகன் அனுப்பியுள்ள அவரது மகனின் புகைப்படங்கள். எல்லாவற்றிலும் ஒரு அருமையான மெசேஜுடன் ஓவியமாக வரைந்து நமக்கு அனுப்பியுள்ளார் குட்டித் தம்பி.. வீட்டோடு இருங்கள்.. வாழ்க்கை நலமாக இருக்கும்.. நாமும் நன்றாக இருப்போம் என்பதை உணர்த்தும் ஓவியங்கள் இவை.. பாராட்டுகள் தம்பி.

அமெரிக்காவிலிருந்து அருமையான செய்தி

இது அமெரிக்காவிலிருந்து நமது வாசகர் கிறிஸ்டல் ரோஸ் அனுப்பியுள்ள ஒரு வீடியோ. அவரது மகன் தேயாசிஸ் இதில் இடம்பெற்றுள்ளார். அதில், நான் சிரமத்தில் இருக்கும் இந்தியாவுக்கு உதவ நினைக்கிறேன். அதேபோல நீங்களும் இந்தியாவுக்கு உதவுங்கள். பிரதமரின் நிதிக்கு பணம் அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மாஸ்டர் தேயாசிஸ். பெரிய மனசு.. நிச்சயம் பாராட்ட வேண்டும்.

சகலகலாவல்லவன் தருண் கார்த்திக்

சகலகலாவல்லவன் தருண் கார்த்திக்

இது வாசகர் ஏ.வீரபாகுவின் குழந்தை வி. தருண் கார்த்திக். 8 வயதாகும் தருண் கார்த்திக் 3வது வகுப்பு படிக்கிறார். கிடார் வாசிக்கிறார். படம் வரைகிறார். அசத்துகிறார்.. அருமையான செய்தியுடன் கூடிய அவரது ஓவியங்கள் கருத்தைக் கவருவதாக உள்ளன. பாராட்டுகள் + வாழ்த்துகள் தருண் குட்டி.. நல்லா படி.. பெரிய உயரத்துக்குப் போ.. வாழ்த்துகள்.

 எங்க வீட்டு சுட்டி

எங்க வீட்டு சுட்டி

இது ஒன்றரை வயதாகும் பிரணவவேல். தினம் தினம் புதுசு புதுசா ஏதாவது கற்று கொண்டும் முயற்சி செய்து கொண்டும் இருப்பான். இருப்பான்.எதையும் வித்தியாசமாக செய்வதில் ஆர்வம் கொண்ட குட்டிச் செல்லம்.. பெற்றோருக்கு இதை விட என்ன பெருமை வேண்டும்.. வாழ்த்துகள் பிரணவ்!

#KidsAreCool.. செயினை உடை.. பை பை டூ கொரோனா.. அசத்தும் குட்டீஸ்!#KidsAreCool.. செயினை உடை.. பை பை டூ கொரோனா.. அசத்தும் குட்டீஸ்!

 தென்காசியிலிருந்து ராம் ரிஷ்வந்த்

தென்காசியிலிருந்து ராம் ரிஷ்வந்த்

இது தென்காசியில் உள்ள ரஞ்சித் - செந்தில் கனி தம்பதியின் செல்ல மகன் ஆர். எஸ். ராம் ரிஷ்வந்த். அங்குள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் எல்கேஜி படிக்கிறார் ராம் ரிஷ்வந்த். நமக்காக வரைந்த ஓவியத்துடன் இங்கு காட்சி தருகிறார்.. சூப்பரா இருக்கு ராஜா ஓவியம்.. தொடர்ந்து கலக்குங்க.. நல்லா படிங்க.. பத்திரமாக இருங்க.

 கால்பந்து ராணி ரித்விகா

கால்பந்து ராணி ரித்விகா

இது நம்முடைய வாசகர் பிரபாவதி இளங்கோவன்.. அவரது செல்ல மகள் ரித்விகாதான் இதில் இருக்கிறார். பிரபாவதி இளங்கோவன் கூறுகையில், நாங்கள் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்கள். தற்பொழுது அபுதாபியில் வசிக்கிறோம். எனது மகள் ரித்விகா. வயது 2. பெற்றோர் பெயர் இளங்கோவன், பிரபாவதி. ரித்விகா- க்கு எப்போதும் விளையாட்டில் மிக ஆர்வம். அதுவும் foot ball என்றால் மிகவும் பிடிக்கும். எது கிடைத்தாலும் காலில் foot ball மாதிரி உதைத்தது கொண்டே இருப்பார். ரித்விகா அப்பா அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அப்பா வாங்க வாங்க என்று சொல்லி foot ball விளையாடுவதே இவர்களின் ஒரே பொழுதுபோக்கு. இந்த covid-19 சமயத்தில் வைட்டமின் சி உள்ள பழங்களை முடிந்ததளவிற்கு சாப்பிடுங்கள். please stay in home and support to our government. ரொம்ப நன்றி மேடம்.. ரித்காவுக்கு வாழ்த்துகள்!.

நிகிஷா - நிதேஷ்

நிகிஷா - நிதேஷ்

இது நிதேஷ் மற்றும் அவரது தங்கை நிகிஷாவின் புகைப்படங்கள். அண்ணனுக்கு வயது 9, 3வது முடித்து 4வது போகிறார். தங்கைக்கு 5 வயது, முதல் வகுப்புக்குப் போகிறார். இருவரும் தங்களது இந்த லாக் டவுன் அனுபவத்தை நமக்கு கடிதமாகவே எழுதி அனுப்பியுள்ளனர். அத்துடன் எப்படி பொழுது போகிறது என்பதையும் புகைப்படமாக அனுப்பியுள்ளனர்.

நித்தீஷ் குட்டி

நித்தீஷ் குட்டி

இது நம்ம நித்தீஷ் குட்டி.. ஈரோடு மாவட்டத்துக்காரர்.. இப்பவே சாருக்கு குங்ஃபூ எல்லாம் பிடிக்குமாம்.. வீட்டில் சும்மா இருக்கும்போது இதுதான் பொழுது போக்கு.. அவ்வப்போது பிளாக்ஸ் அடுக்குவது, தோட்டத்தில் புகுந்து விளையாடுவது என ஓடிக் கொண்டிருக்கு டைம்.. சமத்தா இருடா குட்டி.. வீட்டை விட்டு வெளியே மட்டும் போய்ராத!

 மிருதுளாஸ்ரீ

மிருதுளாஸ்ரீ

இது நமது வாசகர் ஸ்ரீனிவாஸ் ராமமூர்த்தியின் மகள் மிருதுளாஸ்ரீ. யுகேஜி படிக்கிறார். ஓசூரில் வசிக்கிறார். பில்டிங் பிரிக்ஸ், டான்ஸ் இவரது பொழுதுபோக்குகள். விடுமுறையை ஜாலியாக கழித்து வருகிறாராம். புதிய விஷயங்களைக் கொள்வதில் கொள்ளை ஆர்வம் கொண்டவர்.. அதேசமயம், துறுதுறுப்பும் ஜாஸ்திதான். கொரோனா குறித்த நல்ல விழிப்புணர்வு இருப்பதால் வெளியில் போக வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லையாம்.. சமத்துடா செல்லம்.

 கெளசல்யா ஹரிணி - அஷ்வந்த் ஹரீஷ்

கெளசல்யா ஹரிணி - அஷ்வந்த் ஹரீஷ்

இது நமது வாசகர் டி. அருள் கணேஷ் - கார்த்திகா ஜென்சி தம்பதியின் செல்லப் பிள்ளைகள் அஷ்வந்த் ஹரீஷ் மற்றும் கெளசல்யா ஹரிணி ஆகியோர். சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கடையலுருட்டி ஆகும். வீட்டில் போரடிக்குதாம் இரு குட்டீஸ்களுக்கும்.. டிசைன் டிசைனாக விளையாடிப் பார்க்கிறார்கள்.. பொழுது கழியுதோ இல்லையோ.. அப்பா அம்மாவும் கூடவே இருப்பதால் அது தான் நிஜமான மகிழ்ச்சி.. ஹேப்பியா இருங்கடா செல்லங்களா.

English summary
Readers can send their Photos, videos and other intersting things of their kids for this Special page #KidsAreCool.. some of the snapshots from our readers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X