• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

#KidsAreCool.. குவிந்து கொண்டிருக்கும்.. அழகோவியங்கள்.. குட்டீஸ்கள் உலகமே தனிங்க!

|

சென்னை: குட்டீஸ்களின் அழகோவியங்கள், விழிப்புணர்வு வீடியோக்கள் என தொடர்ந்து குவிந்து கொண்டே வருகின்றன. அள்ள அள்ள குறையாத அமுதமாக அவர்களின் படைப்புகள் வந்து கொண்டே உள்ளன.

உண்மையிலேயே பசங்களைப் பாராட்ட வேண்டும்.. சும்மா இருக்காமல் வெறுமனே வீடியோ, டிவி என்று பார்க்காமல் பழந்தமிழர் விளையாட்டுக்களை விளையாடுவது, படம் வரைவது, கவிதை எழுதுவது, விழிப்புணர்வூட்டும் தகவல்களைத் தருவது என கலக்குகிறார்கள்.

நமது வாசகர்கள் வீட்டு செல்லக்குட்டிகளும் இதுதொடர்பாக தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் என குவித்து வருகின்றனர். அதிலிருந்து இன்னும் ஒரு தொகுப்பு இதோ...

ஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா?.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool!

அழகு மதுஸ்ரீயின் மெசேஜ்

அழகு மதுஸ்ரீயின் மெசேஜ்

சென்னையைச் சேர்ந்தவர் அழகுமதுஸ்ரீ. 6 வயதாகும் அழகு மதுஸ்ரீ கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு அருமையான வீடியோ மெசேஜ் போட்டுள்ளார். கூடவே தனது ஓவியத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா குறித்து அச்சப்படாமல், தனித்திருந்து அதை வெல்வோம் என்பதே அழகுமதுஸ்ரீ நமக்கு தரும் அட்வைஸ்.. கேட்டு நடந்துக்கங்க மக்களே.

சமத்து குட்டிங்க

சமத்து குட்டிங்க

இது நமது வாசகர் பொய்கைவளவன் வீட்டுக் குட்டீஸ். பொய்கைவளவனுக்கு இரு மகன்கள். மூத்தவர் அபிஷேக், 5 வயது. இரண்டாவது பையன் பிரணவ், 3 வயது. இருவரும் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டில் சேட்டை செய்யாமல் படம் வரைவது, கேரம் விளையாடுவது, வீட்டை சுத்தப்படுத்துவது, அம்மாவுக்கு உதவுவது என அசத்துகின்றனர்.. சமத்துப் பசங்க.. !

ஓவியக் கலைஞர்கள்

ஓவியக் கலைஞர்கள்

இது ஜோயன் மற்றும் ஜோஸ். இருவரும் அண்ணன் தம்பிகள்.. சமத்துப் பசங்க.. வீட்டோடு இருந்தாலும் சேட்டை பண்ணாமல் அழகாக படம் வரைவது என்று பொழுதைக் கழிக்கிறார்கள். படம் நல்லாருக்கு.. நீங்களும் க்யூட்டா இருக்கீங்க குட்டீஸ்!

#KidsAreCool.. லாக் டவுனா.. எங்களுக்கா.. நீங்க வேற.. கலகலக்கும் குட்டீஸ்கள் உலகம்!

இது மிதுல் மெசேஜ்

இது மிதுல் மெசேஜ்

இது மிதுல் குட்டியோட டிராயிங். சும்மா வெறுமனே படம் வரையாமல் அதில் மெசேஜையும் சேர்த்து வைத்து அசத்தியுள்ளார் மிதுல் குட்டி. Stay Home Stay safe என்று அவர் கூறியுள்ள மெசேஜ் குட்டீஸ்களுக்கு மட்டுமல்ல.. பெரியவங்களுக்கும் சேர்த்துதான். வீட்டோடு இருங்க.. கொரோனாவை விரட்டி அடிப்போம் வேகமாக... வாழ்த்துகள்டா மிதுல் குட்டி.

சூப்பர் சகோதரர்கள்

சூப்பர் சகோதரர்கள்

இது நமது வாசகர் எர்னஸ்ட் சாமுவேல்ராஜ் அனுப்பியுள்ள அவரது வீட்டு குட்டீஸ்களின் படங்கள். மகள் ஜெஃபீனா அழகான மசூதியை வடிவமைத்துள்ளார் பாருங்கள்.. வாவ்.. சூப்பரப்பு!

அன்புச் சகோதரர்கள்

அன்புச் சகோதரர்கள்

இது நமது அன்புக்குரிய வாசகர் ஹாஜி முகம்மது வீட்டு குட்டீஸ். ஹம்மத் மற்றும் ஹஃபீல். வெளியில் போய் ஜாலியாக விளையாட முடியலை.. ஊர் சுத்திப் பார்க்க முடியலை.. ஆனாலும் வீட்டுக்குள் இருப்பது அப்பா அம்மாவின் அன்புக்குள் இருப்பதுதான் சொர்க்கம் என்பதை அவர்களது புன்னகையே காட்டுகிறது. ஹேப்பியா இருங்க குட்டீஸ்.!

வாசகர் கிரிதரன் மகன்

வாசகர் கிரிதரன் மகன்

இது நமது வாசகர் ஏ.கிரிதரன் அனுப்பியுள்ள புகைப்படம். இதில் இருப்பது அவரது மகன். கையில் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு காலை நீட்டி ஹாயாக எதையோ பார்த்து பொழுதைக் கழிக்கிறார் சார்.. கொரோனா அப்டேட் பார்க்கிறாரா அல்லது ஏதாவது டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்க்கிறாரன்னு தெரியலை.. சமத்தா பொழுதைக் கழித்தால் சரித்தான்.

கிஷோர் திருச்செல்வம் மகள்

கிஷோர் திருச்செல்வம் மகள்

இது நமது வாசகர் கிஷோர் திருச்செல்வம் அனுப்பியுள்ள அவரது மகள் ரியாழினியின் புகைப்படம். பாப்பா ஜாலியாக பால்கனியில் அமர்ந்து என்னவோ செய்து கொண்டிருக்கிறார். கூடவே நோட்டுப் புத்தகத்தில் அழகாக ஓவியங்களைத் தீட்டுகிறார்.. முகத்தில் அப்படி ஒரு அழகுப் புன்னகை.. நல்லா இருக்குடா பாப்பா.. ஜாலியா இருங்க.!

லக்ஷிதாஸ்ரீ

லக்ஷிதாஸ்ரீ

இது நமது வாசகர் கலா செந்தில் அனுப்பியுள்ள படம். இதில் இருப்பது அவரது மகள் லக்ஷிதாஸ்ரீ. அழகான கிராப்ட் ஒர்க் செய்கிறார். அருமையாக இருக்கிறது பார்க்கவே.. தொடரட்டும் சிறந்த பொழுதுகள்.

சதீஷ் குமார்

சதீஷ் குமார்

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த நமது வாசகர் வி. சரவணன் தனது மகன் சதீஷ் குமார் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். வித்தியாசமான கேரம் போர்டாக இது தெரிகிறது. கலர்புல்லான அந்த கேரம் போர்டில் குட்டிப் பையன் சதீஷ் குமார் ஜாலியாக விளையாடிக் கொண்டுள்ளார்.

தருண் வெங்கட்டும் பிளாக்குகளும்

தருண் வெங்கட்டும் பிளாக்குகளும்

வாசகர் அழகுஸ்ரீதர் அனுப்பியுள்ள அவரது மகன் தருண் வெங்கட்டின் புகைப்படம் இது. பிளாக்குகளை அடுக்கி சமர்த்தாக விளையாடிக் கொண்டிருக்கிறார் தருண் வெங்கட்.. சூப்பர்.. என்ஜாய் தம்பி!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Readers can send their Photos, videos and other interesting things of their kids for this Special page #KidsAreCool.. some of the snapshots from our readers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X