• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி!

|

சென்னை: சூப்பரப்பு... குழந்தைங்களா கொக்கா.. கொரோனாவெல்லாம் தெறிச்சு ஓடிராது.. பிளான் போட்டு பக்கவாக லாக்டவுன் பீரியடை கழித்து வருகிறார்கள் நம்ம ஊர் குட்டீஸ்.

இப்பெல்லாம் குட்டீஸ்களுக்கு இருக்கும் தெளிவெல்லாம் வேற லெவல்.. நம்மையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார்கள். இப்பக் கூட பாருங்க.. 21 நாள் லாக்டவுன் குறித்து நாமதான் மீம்ஸ் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கிட்ஸ் அப்படியெல்லாம் இல்லை.. ஜாலியாக பல ரூபங்களில் தங்களது பொழுதுகளை கழித்துக் கொண்டுள்ளனர்.

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் க்யூட்டாக விளையாடியபடியும், ஏதாவது செய்தபடியும் உள்ளனரே தவிர போரடிக்குது என்று பெரிய அளவில் புலம்புவதாக தெரியவில்லை. நமக்கு வரும் மெயில்களே அதற்கு சாட்சி.. இதோ இன்னும் ஒரு சூப்பர் தொகுப்பு உங்களுக்காக!

நான் பிரியதர்ஷனி.. இது என் தம்பி பிரசன்னா

நான் பிரியதர்ஷனி.. இது என் தம்பி பிரசன்னா

இது நமக்கு கோவை பீளமேட்டிலிருந்து வந்த ஒரு சூப்பர் மெயில்.. இதை அனுப்பியிருப்பவர் என். பிரியதர்ஷினி. அடுத்து அவர் சொன்னதை அப்படியே தருகிறோம்..."ஹலோ சார்.. என் பெயர் என். பிரியதர்ஷினி. இது எனது தம்பி என். பிரசன்னா. இந்த விடுமுறையில் நாங்கள் எங்கும் டூர் போக முடியவில்லை. ஆனால் எங்களது பெற்றோர் எங்க கூடவே இருக்காங்க. எங்களோட தினசரி ஷெட்யூல் காலை 10 மணிக்கு தொடங்கும். 1. சைக்கிளிங். 2. ஹேன்ட்பால். 3. டிவி. 4. பிசினஸ் கேம். 5. லுடோ. 6. பல்லாங்குழி. 7. கபடி (5 மட்டும்தான்). 8. டிராயிங். 9. ஆன்லைன் டெஸ்ட் (பள்ளிக்கூடத்திலிருந்து வைப்பாங்க). 10. கால்பந்து. எல்லோரும் தனியா இருங்க. அனைவரும் இணைந்து கொரோனாவைரஸை வீழ்த்துவோம்.. என்று அழகாக அனுப்பியுள்ளார் பிரியதர்ஷினி.. சூப்பர் செல்லங்களா.. கலக்குங்க!

கொரோனா விழிப்புணர்வு

கொரோனா விழிப்புணர்வு

இது ஜே. சஞ்சித். திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். 4வது வகுப்பை முடித்துள்ளார். கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பான படம் ஒன்றை வரைந்துள்ளார் சஞ்சித். 144 தடை குறித்த விளக்கப் படம் போல இது அமைந்துள்ளது. கூடவே நமது பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கிறார்.. சூப்பராக வரைந்திருக்கிறாய் சஞ்சித்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.!

இனியன் - கபிலன்

இனியன் - கபிலன்

இது நமது அருமைக்குரிய இனியுனும், சகோதரர் கபிலனும். இவர்கள் வசிப்பது நெதர்லாந்து நாட்டில். ஆளுக்கு ஒரு அருமையான வேலையைச் செய்துள்ளனர். இனியன் க்யூப் விளையாட்டில் கஷ்டப்பட்டு ஒரு சாதனையைச் செய்து முடித்துள்ளார். மறுபக்கம் கபிலன் அழகான லெகோ ஏரோபிளேனை ரெடி செய்து பெருமையுடன் காணப்படுகிறார். இருவரும் சேர்ந்து நமக்குச் சொல்லும் செய்தி.. எல்லோரும் நல்லா ஆரோக்கியமா இருங்க.. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்க.. பாதுகாப்பா இருங்க என்பதுதான்.. உங்களுக்கும் வாழ்த்துகள் குட்டீஸ்.

பிரஜித்தின் கலக்கல்

பிரஜித்தின் கலக்கல்

இது பி. பிரஜித். சேலம் மல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். யுகேஜி படிக்கிறார். அப்பா அம்மா எஸ் பிரபு மற்றும் எஸ். பிரியா. ஓய்வு நேரத்திலும் இடை விடாமல் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறாராம் பிரஜித். இதோ இதில் நம்முடன் அவர் மலேசியாவின் புகழ் பெற்ற பெட்ரோனாஸ் கட்டடத்தை வடிவமைத்து பெருமையுடன் உட்கார்ந்திருக்கிறார். வாழ்த்துகள் பிரஜித்!

கிருஷாந்த்தின் எழுத்துக்கள்

கிருஷாந்த்தின் எழுத்துக்கள்

இவர்தான் கிருஷாந்த். சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர். வீட்டில் ஓய்வாக இருந்தாலும் சார் ரொம்ப சுறுசுறுப்பு, துறுதுறுப்பு.. அப்பாவுடன் விளையாடுவதில் ஒரு ஜாலி. கூடவே எதையாவது எடுத்து எழுதியும் கலக்குகிறார்.. பெரிய எழுத்தாளராக வர வாழ்த்துவோம்.. ஜாலியா இருங்க கிருஷாந்த்.

படம் வரையும் கனிஷ்க்

படம் வரையும் கனிஷ்க்

இது கனிஷ்க். 8 வயது. விடுமுறைக் காலத்தை உருப்படியாகவும், தனது திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் பயன்படுத்துகிறார் கனிஷ்க். ஓவியங்கள் வரைவதில் அலாதி ஈடுபாடு. இதில் வரைந்த ஓவியத்துடன் காட்சி தருகிறார்.. அது ஒரு கொரோனா வைரஸ் ஓவியம்.. சூப்பரா இருக்குடா செல்லம்.. நல்லா பெரிய ஓவியராக எதிர்காலத்தில் வரணும்.. கூடவே நல்ல படிச்சு அதிலும் அசத்தணும்.. வாழ்த்துகள்.

குட்டிப் பையனுக்கு போரடிக்குது

குட்டிப் பையனுக்கு போரடிக்குது

இது தங்கப்பாண்டியன்- மெரீனா பிரேமா தம்பதியின் செல்ல மகன். குட்டிப் பையனுக்கு ரொம்ப போரடிக்குதாம். என்ன பண்றது லாக் டவுனாச்சே.. வெளியில் வர முடியாதே.. வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறார். எல்லாப் பொருட்களையும் எடுத்துப் போட்டு ஜாலியாக விளையாடுகிறார்.. கொஞ்ச நாள்தான்டா குட்டி.. அப்புறம் ஜாலியா வெளியே ரவுண்டடிக்கலாம்.

கலரிங்கில் யுவஸ்ரீ பிசி

கலரிங்கில் யுவஸ்ரீ பிசி

இது கோவை ஆத்திப்பாளையத்தைச் சேர்ந்த நமது வாசகர் சந்திரசேகரன் - நாகஜோதி தம்பதியின் மகள் யுவஸ்ரீ. யுகேஜி படிக்கிறார். லாக் டவுன் பீரியட் என்பதால் வெளியில் போக முடியவில்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் யுவஸ்ரீயின் பெரிய பொழுது போக்கு கலரிங்தான். புத்தகங்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து கலரிங்கில் ஈடுபட்டு பொழுதைக் கழித்து வருகிறாராம. அவருக்கு பிடித்ததும் இதுதானாம். வாழ்த்துகள் பாப்பா.

வீட்டுக்குள் பப்பிள்ஸ்

வீட்டுக்குள் பப்பிள்ஸ்

இது நமது வாசகர் கிரிதரன் - செளந்தர்யா ஈஸ்வரி தம்பதியின் செல்லப் பையன் திர்ஷ்யன்.. வீட்டுக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறார் பாருங்க.. பப்பிள்ஸ் வீட்டு அதை உடைத்து உடைத்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். எப்படியோ ஜாலியா பொழுது போனா சரிதான்.. என்ன சொல்றீங்க!

சஞ்சீவும் சமியூதாவும்

சஞ்சீவும் சமியூதாவும்

இது சென்னை அயனாவாரத்தைச் சேர்ந்த கே. சஞ்சீவ் மற்றும் அவரது சகோதரி கே. சமியூதா. சஞ்சீவுக்கு படம் வரைவது, கிரிக்கெட் ஆடுவது, பூப்பந்து ஆடுவது என நல்லா பொழுது போகுதாம். அப்பா அம்மாவுடன் ஜாலியாக விளையாடி பொழுதைக் கழிக்கிறார். அதேபோல குட்டிப் பாப்பா சமியூதாவுக்கு நடனம் ஆடுவது, வீட்டு வேலைக்கு உதவி செய்வது ஆகியவை பிடிக்குமாம். அழகாக அம்மா சொல்லி கொடுத்த படி சப்பாத்திக்கு மாவு பிசைந்து வேறு கொடுத்து கலக்கியுள்ளார்.. சமத்துக் குட்டிடா நீ.. நல்லா இருங்க ரெண்டு பேரும்.

இது மான்ஷா, மஹிஷா

இது மான்ஷா, மஹிஷா

இது அமெரிக்காவிலிருந்து நமது வாசகர் முத்து அனுப்பியுள்ள படம். முத்துவின் சொத்தே இந்த இரு கட்டி முத்துக்கள்தான்.. ஒருவர் மான்ஷா.. இன்னொருவர் மஹிஷா. இரு மகள்களும் ஆளுக்கு ஒரு லேப்டாப்புடன் ஜாலியாக அப்பாவுடன் லாக் டவுனை கழித்துக் கொண்டுள்ளனர். அப்பா மடியில் அமர்ந்து கொண்டு ஒரு பாப்பா விளையாடுகிறது.. இன்னொரு பாப்பா பக்கத்தில்.. அனைவரும் இதுபோல இணைந்து இருப்பது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது அந்த வகையில் இப்படிப்பட்ட குடும்ப நேரத்தை அருமையாக செலவிடுவதை விட வேறு மகிழ்ச்சியே இருக்க முடியாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு முத்து அவர்கள் நமது வாசகர்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Readers can send their Photos, videos and other intersting things of their kids for this Special page #KidsAreCool.. some of the snapshots from our readers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X