• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

#KidsAreCool.. செயினை உடை.. பை பை டூ கொரோனா.. அசத்தும் குட்டீஸ்!

|

சென்னை: இதோ இன்னும் இன்னும் வந்து குவிந்தே கொண்டே இருக்குங்க கொரோனாவுக்கு எதிரான குட்டீஸ்களின் அதிரடி படைப்புகள்.

ஒவ்வொரு குழந்தையும் விதம் விதமாக டிசைன் டிசைனாக யோசிக்கிறார்கள். பார்க்கவே செம குஷியாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வீட்டில் சும்மா டிவியே பார்த்துக் கொண்டிருக்காமல் இப்படியெல்லாம் அவர்கள் வித்தியாசமாக யோசிப்பது நல்ல விஷயம்தானே.

தொடர்ந்து வெளியாகி வரும் இந்த புகைப்படத் தொகுப்பில் இதோ இன்னும் ஒரு ஜாலி தொகுப்பு.. வாங்க பார்க்கலாம்.

#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி!

ரித்திக்

ரித்திக்

இவர் நெல்லையைச் சேர்ந்த நமது வாசகர் பரமகுருநாத் - கீதா தம்பதியின் மகன் ரித்திக். எல்கேஜி படிக்கிறார். முகத்தில் அப்படி ஒரு அழகான புன்னகை.. க்யூட்டா இருக்குடா குட்டி!.. இவர் கையில் 2 டிராயிங். ஒன்று.. செயினை உடை.. பைபை டூ கொரோனா என்று கொரோனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. இன்னொன்றில்.. அழகான பூக் கூட்டம். சூப்பர் குட்டிப் பையா.. நல்லாருக்கு!

பிரகதி

பிரகதி

அடுத்து வருபவர் நம்ம பிரகதி பிரபு. அழகழகாக ஓவியங்களை வரைந்து அடுக்கித் தள்ளியுள்ளார். அத்தனை ஓவியங்களும் பார்க்க செமையாக இருக்கிறது. வாழ்த்துகள்டா பிரகதி.. அதில் ஒரு மெசேஜும் உள்ளது. வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கியிருங்கள் என்று அனைவருக்குமே அன்பான வேண்டுகோள் வைத்துள்ளார் அழகான ஓவியம் மூலமாக.. பாராட்டுவோம்.. வாழ்த்துவோம்.

அருமையான ஓவியம்

அருமையான ஓவியம்

இது நமது வாசகர் விழுப்புரத்தைச் சேர்ந்த இரவி அனுப்பியுள்ள புகைப்படம். இதில் இடம் பெற்றிருப்பது அவரது சகோதரியின் மூத்த மகன் கார்த்திக். அருமையான ஓவியங்களைப் படைத்துள்ளார் கார்த்திக். பார்க்கவே பிரமாதமாக இருக்கிறது. அதேபோல கார்த்திக்கின் தம்பி வரைந்த ஓவியமும் இதில் இணைத்துள்ளனர். அனைத்துமே அருமையாக இருக்கிறது குட்டீஸ்.. வாழ்த்துகள்.

கிறிஸ்டியின் ஓவியங்கள்

கிறிஸ்டியின் ஓவியங்கள்

இந்தப் படத்தில் இருக்கும் குட்டிப் பாப்பாவின் பெயர் ட்ரூத் கிறிஸ்டி. கோவையைச் சேர்ந்தவர். 2ம் வகுப்பு படிக்கிறாங்க. அருமையா ஓவியம் வரையறாங். பார்க்கவே பளிச்சென சூப்பராக இருக்கிறது.. அதைவிட கிறிஸ்டி பாப்பாவும் இன்னொரு ஓவியமாக இருக்கிறார்.. வாழ்த்துகள் கிறிஸ்டி.. இன்னும் நிறைய படங்கள் வரைங்க.. நல்ல முறையில் இந்த விடுமுறையை பயன்படுத்துங்க.

சர்வ பரீக்சித்

சர்வ பரீக்சித்

ராமநாதபுரத்திலிருந்து நமது வாசகர் சக்கரவர்த்தியின் மகன், 4 வயதாகும் சி. சர்வபரீக்சித் அனுப்பியுள்ள ஓவியங்கள் வந்து சேர்ந்துள்ளன. எல்லாமே சூப்பராக இருக்கிறது. பிரமாதமாக வரைந்திருக்கிறாய் குட்டிப் பையா. அதிலும் நான் சர்வ பரீக்சித்.. நான் வீட்டிலேயே இருக்கிறேன்.. எனவே எனக்கு கொரோனா குறித்த பயமே இல்லை என்று எழுதியிருப்பது சூப்பர். மேலும் வீட்டிலேயே இருந்து அனைவரையும் பாதுகாப்போம் என்றும் அழகான மெசேஜையும் கொடுத்திருக்கிறார் சர்வ பரீக்சித்.. வாழ்த்துகள் செல்லம்.

யாழினி ஹர்ஷினி

யாழினி ஹர்ஷினி

இது நமது வாசகர் பிரதீப் குமார் அனுப்பியுள்ள புகைப்படம். இதில் இருப்பவர்கள் அவரது சகோதரியின் மகள்கள் யாழினி மற்றும் ஹர்ஷினி. அப்பா பெயர் செந்தில் குமார். இருவரும் வீட்டு வளாகத்தில் ஜாலியாக கார் மீது ஏறி போஸ் கொடுக்கின்றனர். குட்டீஸ்.. பத்திரமா வீட்டுக்குள்ளேயே இருங்க.. அதிகம் வெளியில் வரக் கூடாது.. கவனம்.

அஸ்வதிக்காவின் சூப்பர் ஐடியா

இதில் இருப்பது சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த குட்டிப் பாப்பா அஸ்வத்திகா. எப்படி ஒரு நாவல் ஐடியா பாருங்க.. இதுதான் டிரட் மில்லாம்.. சேரை கவிழ்த்துப் போட்டு டிரட்மில் போல பாவித்து அழகாக எக்ஸர்ஸைஸ் செய்கிறார். எல்லோரும் கத்துக்கங்கப்பா.. குட்டிப்பாப்பாவோட சூப்பர் ஐடியாவை.. நல்லா இருக்குடா அஸ்வத்திக்கா.. என்ஜாய்!

 இது சுபாஞ்சனாவின் மெசேஜ்

இது சுபாஞ்சனாவின் மெசேஜ்

இது சுபாஞ்சனா. நமது வாசகர் மனோகர் - ஜெயஜோதி தம்பதியின் மகள். 2வது வகுப்பு படிக்கிறார். Stay Home Stay safe என்ற அழகான மெசேஜுடன் கொரோனாவைரஸ் படத்தையும் வரைந்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.. சூப்பரா இருக்குடா சுபாஞ்சனா செல்லம்.. வாழ்த்துகள்.

 வீட்டுக்குள்ளேயே சைக்கிளிங்

வீட்டுக்குள்ளேயே சைக்கிளிங்

இது நமது வாசகர் ஆஷா ஷப்ரீனின் மகள் ஷார்மின் ஹஸ்னா. சென்னை பெரும்பாக்கத்தில் வசிக்கிறார். கொரோனாவால் வெளியே போக முடியாததால் வீட்டுக்குள்ளேயே ஜாலியாக சைக்கிளிங் நடக்கிறது.. என்ஜாய் ஹஸ்னா!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Readers can send their Photos, videos and other intersting things of their kids for this Special page #KidsAreCool.. some of the snapshots from our readers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X