சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

21 நாள் லாக் டவுன்.. குட்டீஸ்கள் எல்லாம் செம ஹேப்பி.. ஜாலி விளையாட்டு.. வாங்க வந்து பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: 21 நாள் லாக்டவுன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.. சிலருக்கு இது போரடிக்கும் சமாச்சாரம்.. சிலருக்கு நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு.

வயதான பெரியவர்கள் உள்ள வீடுகளும், குட்டீஸ்கள் நிறைந்து இருக்கும் வீடுகள் புண்ணியம் செய்தவை.. பெரியவர்களுடன் அமர்ந்து பேச இது ஒரு நல்ல வாய்ப்பு. இத்தனை காலம் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடியவர்கள் அத்தனை பேருக்கும் சுய பரிசோதனை செய்ய நல்ல டைம் இது.

அதை விட முக்கியமானது குட்டீஸ்கள்தான்.. இதுங்களை சமாளிக்க முடியலப்பா.. நல்லா டிரில் வாங்குறாங்க.. எப்பப்பா கொரோனா ஒழியும் என்று பலரும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி குட்டீஸ்களை ரசிக்க ஆரம்பித்தோம் என்றால் அதை விட சிறந்த பொழுது போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா?.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool! ஊரடங்கு.. வீட்டில் உள்ள சுட்டீஸ் வைரல் ஆக வேண்டுமா?.. ஒன்இந்தியா தரும் செம வாய்ப்பு.. #KidsAreCool!

குட்டீஸ்களின் லூட்டிகள்

குட்டீஸ்களின் லூட்டிகள்

நமது வாசகர்களிடம் உங்களது வீட்டில் குட்டீஸ்கள் அடிக்கும் லூட்டிகள், செய்யும் சேட்டைகள், பண்ணும் காரியங்களை போட்டோவாக எடுத்து அனுப்புங்க என்று கேட்டிருந்தோம்... அடேங்கப்பா வந்து குவிந்து விட்டன புகைப்படங்களும், அவர்களின் வீட்டு கலாட்டாக்களும். அதை கலாட்டா என்று சொல்ல முடியாது. கலகலப்பு திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். விதம் விதமாக, டிசைன் டிசைனாக.. எக்கச்சக்கமாக.

வாசகர் முகம்மது ஷபீக்

வாசகர் முகம்மது ஷபீக்

இது நம்ம வாசகர் முகம்மது ஷபீக் அனுப்பிய படம். இந்தப் படத்தில் இருப்பவர் டி.எம். ஹன்னா. ஷபீக்கின் செல்ல மகள். படிப்பது எல்கேஜி.. வசிப்பது கோவை. வீட்டில் பொழுது போகலேயேன்னு வருத்தம் ஏமாற்றம் இருந்தாலும் அதையும் தாண்டி தன்னுடைய நேரத்தை அழகாக வடிவமைத்துக் கொள்கிறார்.. விதம் விதமா டிரஸ் போட்டுக்கிறது.. மேக்கப் போட்டுக்கிறது.. இப்படி போயிட்டிருக்காம் பொழுது ஹன்னா பாப்பாவுக்கு.. நல்லா ஜாலியா இருங்க குட்டிம்மா!

கவிதா கண்ணன் வீட்டு குட்டீஸ்

கவிதா கண்ணன் வீட்டு குட்டீஸ்

இது ஷார்ஜாவில் வசித்து வரும் நமது வாசகர் கவிதா கண்ணன் வீட்டு குட்டீஸ்கள். . அக்காவும் தம்பியும்..அனுசுயா ஸ்ரீ மற்றும் ஷிவ்நரேன்.. ஸ்கூல் கிடையாது.. அதனால் அது போனஸ் ஜாலி.. என்ன வெளியில் போய் விளையாட முடியலை.. அது மட்டும்தான் ஏமாற்றம்.. இருந்தாலும் அதையும் தாண்டி அக்காவும் தம்பியும் வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி உலகத்தை உருவாக்கிக் கொண்டு ஜாலியாக இந்த 21 நாள் லாக் டவுனை கழித்து வருகிறார்கள்.

குலாம் ஆஷிகா வீட்டு குட்டீஸ்

குலாம் ஆஷிகா வீட்டு குட்டீஸ்

இது நமது புதுச்சேரி வாசகர் குலாம் ஆஷிகா அனுப்பியுள்ள அவரது வீட்டு குட்டீஸ்கள் படம். ஒருவர் ஓவியம் வரைகிறார்.. விதம் விதமாக.. ஐலவ் இந்தியா ஒரு பக்கம்.. பாண்டிச்சேரி பீச் ரோடு ஓவியம் இன்னொரு பக்கம்.. அப்படியே கொரோனாவை வைத்து ஒரு ஓவியம் தீட்டியிருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.. பட் மிஸ் ஆகி விட்டது போல.. பரவாயில்லை உருப்படியாக பொழுதைக் கழிக்கிறார்கள் இந்த குட்டீஸ்கள்.

மாஸ்டர் நித்தீஷ் யோகா

மாஸ்டர் நித்தீஷ் யோகா

வாவ் குட்டிப் பையா.. சூப்பர்.. என்று சொல்ல வைக்கிறார் மாஸ்டர் நித்தீஷ். 11 வயதாகும் நித்தீஷ் யோகாசனத்தில் கலக்குகிறவர். இந்த விடுமுறை காலத்தில் உருப்படியாக பொழுதைக் கழித்து வரும் நித்தீஷ் செய்யும் யோகா முத்திரைகளை அவரது தந்தை புகைப்படமாக எடுத்து நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நிறைய குட்டீஸ்கள் யோகா கற்றுக் கொள்ளலாம்.. இது நல்ல உடற்பயிற்சி மட்டுமல்ல.. மனதையும் ஒருமுகப்படுத்த உதவுவது.. சூப்பர் நித்தீஷ்.

சரண்யா அருண் பிரசாத் வீட்டு குழந்தைகள்

சரண்யா அருண் பிரசாத் வீட்டு குழந்தைகள்

குழந்தைங்க எப்பவுமே புத்திசாலிகள்.. நாம் ஒன்று நினைத்துக் கொண்டிருப்போம்.. ஆனால் அவர்கள் வேற லெவலில் சிந்தனையை கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள். அதுவும் இக்காலத்துக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும், சிந்தனைத் திறனும் பிரமிக்க வைக்கக் கூடியது. நமது வாசகர் சரண்யா அருண் பிரசாத் தனது வீட்டு குட்டீஸ்களான நவில் மற்றும் நீவன் ஆகியோரின் விளையாட்டை வீடியோவாகவே அனுப்பி வைத்துள்ளார். அப்பாவும், பிள்ளைகளுமாக விளையாடும் வீடியோ. நீங்களும் பார்த்து மகிழுங்க.

ஹர்சிவாவின் விளையாட்டு

ஹர்சிவாவின் விளையாட்டு

இது நமது வாசகர் சந்தோஷ் அனுப்பியுள்ள புகைப்படம். அவரது மகன் ஹர்ஷிவாவின் விளையாட்டுதான் இதில் இடம் பெற்றுள்ளது. குட்டிப் பையன் எப்படி பொழுதைக் கழிக்கிறார் பாருங்க.. இதைப் பார்க்கும்போது நமக்கு பால்ய காலத்து விளையாட்டுக்கள் எல்லாம் மனதில் வந்து ஓடுகிறது. இப்படியெல்லாம் இப்போது விளையாட யாருக்குமே நேரம் இருப்பதில்லை. ஆனால் 21 நாள் லாக்டவுன் நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

மரம் ஏறும் குட்டிப் பாப்பா

மரம் ஏறும் குட்டிப் பாப்பா

இது நமது வாசகர் பிரகாசம் வேலு அனுப்பி வைத்துள்ளது அவரது சுட்டி மகளின் புகைப்படம். பெயர் வி.பி. குறள் ஓவியா. .பெயரே எத்தனை அழகு பாருங்க. ஆனால் பாப்பா செய்கிற வேலை அசர வைக்கிறது. வீட்டுத் தென்னை மரத்தில் ஏறி விளையாடுகிறது இந்த ஓவியம்.. கம்ப்யூட்டர் கேம்ஸ், செல்போன் என்று நோண்டிக் கொண்டிருக்காமல் இப்படி இயற்கையோடு விளையாடுவது நல்லாருக்கு.. கூடவே பாதுகாப்பும் முக்கியம்.. பத்திரம் ஓவியா!

ஆத்விகா

ஆத்விகா

இது குட்டிப் பாப்பா ஆத்விகா. வாசகர் பிரதீப் குமாரின் மகள்.. இந்த பச்சைக் குழந்தையின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. சிரிப்பு. ஏதுமறியாத உலகில் அம்மாவின் கையில் சந்தோஷமாக தவழ்கிறது. இந்த குழந்தைக்கான உலகமாக நாம் இதை பத்திரமாக மாற்றித் தந்தாக வேண்டும். இந்தக் குழந்தையைப் பார்க்கும்போது அந்த பயம்தான் நமக்கு வருகிறது.. இவர்களுக்கு ஏற்றவாறு இந்த உலகம் சீக்கிரம் மீண்டு வரட்டும்.

பார்த்திபன்

பார்த்திபன்

இது நமது வாசகர் பார்த்திபன் சக்கரவர்த்தி அனுப்பி வைத்துள்ள அவரது மகனின் புகைப்படம். சார் செம ஜாலியாக இருக்கிறார் போல. மைக்கைப் பிடித்து பாட்டுப் பாடுகிறாரா இல்லை என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.. மைக் மோகனாக வர வாழ்த்துவோம்.. கூடவே பிளாக்ஸ் அடுக்கி அதையும் ஒரு கை பார்க்கிறார்.. சகலகலா வல்லவராக சாதிக்கட்டும்.. !

English summary
Readers can send their Photos, videos and other intersting things of their kids for this Special page #KidsAreCool.. some of the snapshots from our readers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X