சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதிச்சிட்டாரே எடப்பாடியார்.. தமிழகத்தில் நிறுவப்படுகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : TN CM Edapadi palanisamy wears Suit in his foreign Trip

    சென்னை: லண்டன், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    லண்டனில் அனைத்து வசதிகளுடன் கூடிய அட்வான்ஸ் தர சிகிச்சை சேவை கொண்ட மருத்துவமனை கிங்ஸ் மருத்துவமனையாகும் (King's hospital). இந்த மருத்துவமனையின் கிளைதான் தமிழகத்தில் அமைய உள்ளதாம்.

    இதேபோல, லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன், டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தாகியுள்ளது. டெங்கு, மலேரியா ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க இந்த நோக்க அறிக்கை, கையெழுத்திடப்பட்டுள்ளது.

    நான் கோட் சூட் போட்டா உனக்கு காண்டாகும்னா அதையும் போடுவேன்டா.. கதி கலக்கும் எடப்பாடியார்நான் கோட் சூட் போட்டா உனக்கு காண்டாகும்னா அதையும் போடுவேன்டா.. கதி கலக்கும் எடப்பாடியார்

    ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    இந்த ஒப்பந்தங்களின்போது, முதல்வருடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் இருந்தார். லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை திரும்பிவிடுவார். சுகாதாரத் துறையில், நீண்ட காலமாக தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும்.. அவ்வளவு ஏன், வெளிநாடுகளில் இருந்து கூட மேல் சிகிச்சை பெறுவதற்காக, சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    எய்ம்ஸ்

    எய்ம்ஸ்

    இந்த நிலையில்தான், மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மதுரையில் நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    கிங்ஸ் மருத்துவமனை

    கிங்ஸ் மருத்துவமனை

    இப்போது, இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ், மருத்துவமனையின், கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வரலாற்றில் இது, முக்கியமான ஒரு மைல்கல் என்று பார்க்கப்படுகிறது.

    சாதிச்சிட்டாரே

    சாதிச்சிட்டாரே

    தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பிரபலமாக உள்ள மருத்துவமனையின், கிளைகள் தமிழகத்திற்கு வருவதால், தமிழகம் சுகாதாரத்துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் கிளம்பி செல்வதற்கு வழிவகுக்கும். அந்த வகையில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் எடப்பாடி பழனிச்சாமி சாதித்து விட்டார் என்று உறுதியாகக் கூறலாம்.

    English summary
    King's Hospital branch will come to Tamilnadu, The agreement was signed in the presence of Chief Minister Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X