சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. சூரியன் ஓம் ஓம்னு முழங்குதா.. கிரண் பேடி போட்ட டிவீட்.. நெட்டிசன்கள் கலாய்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கிரண் பேடி போட்ட டிவீட்.. நெட்டிசன்கள் கலாய்! - வீடியோ

    சென்னை: புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் கிரண் பேடி போட்ட டிவீட்டால் பெரும் கலகலப்பு ஏற்பட்டுள்ளது. சூரியன் ஓம் என்று முழங்குவதாக யாரோ போட்ட வீடியோவை எடுத்து கிரண் பேடி டிவீட் போட்டுள்ளார். இதுதான் கேலிக்குள்ளாகியுள்ளது.

    சூரியன் அமைதியாக இருப்பதில்லை. அதிலிருந்து சத்தம் வெளியாகிறது என்று நாசா விஞ்ஞானிகள் முன்பே கண்டறிந்து அது தொடர்பான சோனார் சத்தத்தையும் வெளியிட்டுள்ளனர். இது ரொம்பப் பழைய செய்தி.

    இந்த அறிவியல் மேட்டரை கையில் எடுத்துக் கொண்டு நம்மவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றி சூரியனிலிருந்து வரும் சத்தம் ஓம் என்று ஒலிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறி அதில் செயற்கை சத்தத்தை சேர்த்து மிக்ஸ் செய்கது மிர்ச்சி மசாலாவாக்கி காமெடி செய்து வருகின்றனர். இதுவும் பழைய செய்திதான்.

     தனித்தனி தேர்தல்.. சொதப்பிய அதிமுகவின் பிளான்.. மூத்த தலைகள் கோபம்.. அடுத்து என்ன நடக்கும்? தனித்தனி தேர்தல்.. சொதப்பிய அதிமுகவின் பிளான்.. மூத்த தலைகள் கோபம்.. அடுத்து என்ன நடக்கும்?

    ஓம் முழக்கம் வருதாமே

    கிரண் பேடி இந்த டுபாக்கூர் ஆடியோ- வீடியோவை எடுத்து தனது டிவிட்டரில் போட்டுள்ளார். இதை ஏன் அவர் போட்டார் என்று தெரியவில்லை. ஆனால் கிரண் பேடியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது போடப்பட்டுள்ளது. இது பெரும் கேலிக்கூத்தாகியுள்ளது. பலரும் இதை கலாய்த்து வருகின்றனர்.

    ரோல் மாடலாச்சே நீங்க

    துணை நிலை ஆளுநர் டிவீட் போடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டாமா. நீங்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடல் ஆயிற்றே. கவனமாக இருக்க வேண்டுமல்லவா என்று கேட்டுள்ளார் இவர்.

    அது ஒரு காலத்தில்

    ஒரு காலத்தில் இவர் பல லட்சம் பேருக்கு ரோல் மாடலாக இருந்தார். ஆனால் இப்போது இவர் வீழ்ந்து விட்டார். விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னது போல மனித முட்டாள்தனத்திற்கு முடிவே இல்லை என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

    எது உண்மையான சத்தம்

    உண்மையில் சூரியனிலிருந்து என்னதான் சத்தம் வருகிறது என்று கேட்டால்.. உண்மையில் சத்தம் வருகிறதுதான். ஆனால் அந்த டிவீட்டில் உள்ளது ஓம் என்றெல்லாம் யாரும் உட்கார்ந்து முழங்கவில்லை. மாறாக, ஒரு நிலையான சத்தம் வருகிறது அவ்வளவுதான். சாதாரண சத்தம் அது. அவ்வளவுதான். இதைத்தான் நாசாவும் வெளியிட்டுள்ளது.

    English summary
    Puducherry Lt Governor Kiran Bedi's sounds of sun Tweet has created heated debate in the Twitter world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X