சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன் திடீர்னு தமிழ்நாட்டு அரசியல் மீது பாய்கிறார் கிரண் பேடி.. யாரை குறி வைக்கிறார்?

தமிழக அரசை கிரண்பேடி விமர்சிக்க என்ன காரணம் என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    Stalin slams Kiran Bedi | கிரண் பேடிக்கு எதிராக பேரவைக்கு வெளியே கொந்தளித்த ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: பாண்டிச்சேரியை விட்டுட்டு கிரண்பேடி தமிழ்நாட்டு அரசியலை விமர்சித்திருப்பது ஏகப்பட்ட குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து நாராயணசாமியுடன் மல்லு கட்டிக் கொண்டிருந்த கிரண்பேடிக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. நம்ம ஊர் பக்கம் வந்து, நம்மையே விமர்சனம் செய்துள்ளார்.

    "மோசமான அரசின் செயல்பாடு, ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு துணிவற்ற மக்கள். அவர்களின் கோழைத்தனமும் சுயநலமும் தான் தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம்'' என்று சொல்லி உள்ளார்.

    சர்ச்சை

    சர்ச்சை

    இதில், அதிமுக, திமுக என பாகுபாடு இல்லாமல் கிழித்து தொங்க விட்டுள்ளார் என்றாலும், இதை ஏன் கிரண்பேடி சொல்கிறார் என்பதும், இங்கிருப்பதை விமர்சிக்க இவருக்கு என்ன உரிமை உள்ளது என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

    ஊழல் அரசியல்

    ஊழல் அரசியல்

    ஊழல் அரசியல் என்று அரசின் செயல்பாட்டை சொல்லி இருப்பதற்கு பாஜக தரப்பில் இதுவரைஎந்த விளக்கமும் இல்லை. அதே சமயம், பாஜகவின் அபிமானி கிரண்பேடியின் கருத்துக்கு அதிமுக வலிமையான கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. கிட்டத்தட்ட இவர் ஜெயலலிதா அரசையும் சேர்த்துத்தான் ஊழல் அரசு என்று விமர்சித்துள்ளார்.

    குடிநீர் பஞ்சம்

    குடிநீர் பஞ்சம்

    குடிநீர் பஞ்சத்துக்கு 2 ஆட்சியாளர்களுமே காரணம் என்ற கிரண்பேடியின் கருத்தை யாராலும் மறுக்க முடியாதுதான். ஆனால் ஊழல்அரசியல் என்ற வார்த்தையை பாஜக தலைமையோ, அகில இந்திய தலைமையோ பகிரங்கமாக ஏற்று கொள்வார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

    மாநில தலைமை

    மாநில தலைமை

    மேலும், கிரண்பேடி மாநில அரசை விமர்சிப்பதால், அதிமுகவுடன் பாஜகவுக்கான நெருக்கம் குறைகிறது என்று எடுத்து கொள்வதா, அல்லது இப்படி ஒரு மாநில தலைமையை விமர்சிக்குமாறு கிரண்பேடிக்கு ஏதேனும் அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளதா என்றும் புரியவில்லை.

    போராட்டம்

    போராட்டம்

    கிரண் பேடி கருத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாளை போராட்டத்தையும் நடத்தவுள்ளது. ஆனால் மழுப்பலான முறையில் தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார் கிரண் பேடி. இருப்பினும் எந்த அரசை ஊழல் அரசு என்கிறார். தமிழக அரசியலே ஊழல் அரசியல் என்றால் தண்ணீர் பிரச்சினை உள்ள மற்ற மாநிலங்களிலும் ஊழல் அரசியல்நடைபெறுகிறது என்று அவர் சொல்வாரா.. என பல கேள்விகள் எழுந்துள்ளன.

    குழப்பம்

    குழப்பம்

    வழக்கம் போல இவற்றுக்கும் நேரடியான பதில் கிரண்பேடியிடம் இல்லை. ஆக மொத்தம், ஏற்கனவே மல்லு கட்டி கொண்டிருக்கும் தமிழக அரசியலில் கிரண்பேடி உள்ளே புகுந்து இன்னும் குழப்பி விட்டு போயுள்ளார்

    English summary
    Kiranbedi says People of Tamilnadu are cowardly and criticized TN Gov also
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X