சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்து அரசியலுக்கு வருவீர்களா? சிரித்துக்கொண்டே கிருத்திகா உதயநிதி சொன்ன பளீச் பதில்.. வைரல்!

Google Oneindia Tamil News

சென்னை: தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அரசியலில் என்ட்ரியா..? கிருத்திகா உதயநிதி பளிச் பதில்!

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார்.

    கடனால் மூழ்கிய குடும்பம்.. ராணிப்பேட்டையில் 3 பேர் தற்கொலைகடனால் மூழ்கிய குடும்பம்.. ராணிப்பேட்டையில் 3 பேர் தற்கொலை

    குதிரைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல்நிலைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடந்தது.

     கிருத்திகா உதயநிதி

    கிருத்திகா உதயநிதி

    இந்த நிழ்ச்சிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது போன்ற முகாம் ஏற்கனவே ஒரு முறை நடத்தப்பட்டுள்ளது. 2ஆவது முறையாக இன்று அந்த முகாம் நடத்தப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மூலம் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வரும் காலங்களில் விலங்கு நல ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடர்ந்து இதுபோன்ற மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்,

     அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

    அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

    அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசியலுக்கு வரும் எந்த திட்டமும் தனக்கு இல்லை எனத் திட்டவட்டமாகப் பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

     உதயநிதி

    உதயநிதி

    தற்போது திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தீவிர அரசியலில் நுழைந்தார். அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். 2019 மக்களவை தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புதுவை உட்பட 39 இடங்களில் வென்றன. அதைத் தொடர்ந்து 2019 ஜூலை மாதம் அவர் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

     அமைச்சர்கள் வலியுறுத்தல்

    அமைச்சர்கள் வலியுறுத்தல்

    தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் மாநிலம் முழுக்க பிரசாரம் செய்தார். அவரது பிரச்சாரத்திற்கு மாநிலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக அரசு பதவியேற்ற போது, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் உள்ளிட்டோர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    kiruthiga udhayanidhi about her political entry. latest DMK news in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X