சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பாஜக தோல்விக்கு காரணம் தெரியும்... எஸ்.வி. சேகர் சொல்வதை பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    S.V. Sekar press meet | தமிழகத்தில் பாஜக தோல்விக்கு காரணம் தெரியும்: எஸ்.வி. சேகர் கருத்து

    சென்னை: மோடியின் திட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ததால் தான், பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் 350 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால், தமிழகத்தில், பாஜக வேட்பாளர்கள் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்தர்நாத்தை தவிர மற்ற 38 இடங்களையும், திமுக கூட்டணி கைப்பற்றியது.

    Known the reason for defeat of the BJP in Tamil Nadu Says Actor S.V. Sekar

    அதே நேரம், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 2.23 கோடி வாக்குகள் பெற்று திமுக கூட்டணி முதலிடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி ஒரு கோடியே 28 லட்சம் வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தது. இருப்பினும், கடந்த தேர்தலை காட்டிலும், பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. 5.41 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவிற்கு குத்தியுள்ளனர்.

    விஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ! விஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ!

    இந்தநிலையில், தமிழகத்தில் பாஜகவின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் எஸ்.வி. சேகர், பாரதிய ஜனதாவை வடமாநில மக்கள் அதிகம் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏற்கவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால், அவருடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. இங்கே, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தால், தோல்வி ஏற்பட்டு இருக்கிறது என்றார்.

    நீட் தேர்வு, சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை போன்ற திட்டங்களை பொறுத்த வரை, தமிழக கட்சிகள் இரட்டை நிலையில் உள்ளார்கள். இதனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.வி. சேகர் கூறினார்.

    English summary
    Actor S.V. Sekar Said that Known the reason for defeat of the BJP in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X