கோடநாடு வழக்கு.. கூலாக பேசிய சசிகலா.. மீண்டும் குவிந்த தனிப்படை அதிகாரிகள்.. தொடங்கிய நேருக்கு நேர்!
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
Recommended Video
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 200 கேள்விகள் வரை கேட்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தனிப்படை விசாரிக்க உள்ளது.
சசிகலாவிடம் சென்னையில் தி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று விசாரணை செய்யப்பட்டது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடந்தது.

நேற்று விசாரணை
நேற்று நடந்த விசாரணையில் எஸ்டேட்டில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. பெரும்பாலும் கோடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பது பற்றிய கேள்விகள் இவை. கோப்புகள் இருந்ததா.. இருந்தது என்றால் என்ன மாதிரியான கோப்புகள். காணாமல் போன கோப்புகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அங்கு எஸ்டேட்டில் இருந்து சில கோப்புகள் திருட்டின் போது காணாமல் போய் இருக்கின்றன. அதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வெளிப்படை
நேற்று எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் சசிகலா வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார். எந்த கேள்விக்கும் மறுப்பு தெரிவிக்காமல் தெரிந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து உள்ளார். அதோடு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். எனக்கு தெரிந்த விவரங்களை, உண்மைகளை சாட்சிகளாக அளிப்பேன் என்று சசிகலா உறுதியாக கூறி இருக்கிறார். சில இடங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சிவசப்பட்டார்
இந்த நிலையில் நேற்று சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் முழுமையாக விசாரணை முடியும் வரை அதை பற்றி எதுவும் பேச கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விசாரணை பற்றி அவர் சொல்லவில்லை.. நாளையும் ( இன்று) விசாரணை நடைபெற உள்ளது. அதன்பின் நான் விரிவாக பேசுகிறேன். எல்லா கேள்விக்கும் பதில் அளித்தேன். மற்ற விவரங்களை இப்போது சொல்ல முடியாது விசாரணை முடிந்து சொல்கிறேன் என்று சசிகலா கூறினார்.

இன்று மீண்டும்
இந்த நிலையில்தான் இன்று அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. நேற்று 200 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. இன்னும் 300 கேள்விகள் இந்த வழக்கில் மீதம் உள்ளது. அவை இன்று கேட்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி கோடநாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் இங்கு நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

வழக்கு பின்னணி
அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியது. இந்த தொடர் மரணங்கள் பற்றியே தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications