சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோடநாடு விவகாரம்.. ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியீடு- வீடியோ

    சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ வெளியிட்ட தெகல்கா இணையத்தள முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின், சைபர் கிரைம் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர் . ஆவணப்படத்தில் பேட்டியளித்த மனோஜ், சயான் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Kodanad estate: Tamilnadu cyber crime police file a complaint against Tehelka ex editor Mathews

    டெல்லியில் நேற்று இந்த ஆவணப்படத்தை மேத்யூஸ் வெளியிட்டார். அதில் கோடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் பலவற்றை எடுப்பதற்காக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் என்பவர் கேரளாவிலிருந்து கொள்ளையர்களை அழைத்து வந்து கொள்ளை நடத்தியதாகவும், அந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் வரிசையாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu cyber crime police file a complaint against Tehelka ex editor Samuel Mathews and others over Kodanad estate documentary film.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X