சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 பக்கமும் வளைக்க பிளான்.. "கிடைக்கிற கேப்பில் எல்லாம்".. எடப்பாடிக்கு "கேட்" போடும் திமுக? போச்சே!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில்.. அதிமுக சம்பந்தப்பட்ட இரண்டு 2 முக்கியமான வழக்குகள் மீதான விசாரணைகள் தீவிரம் அடைந்து உள்ளன.

Recommended Video

    இரட்டை தலைமை அதிமுகவுக்கு ஒத்துவராது - Thirunavukkarasar கருத்து | Politics

    அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சம் அடைந்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஒற்றை தலைமையை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    இன்னொரு பக்கம் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒற்றை தலைமைக்கு குறுக்கே நிற்கும் நிலையில், இன்றிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்து ஆதரவு திரட்டும் நோக்கத்திலும் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார்.

    நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்ற கட்சி அதிமுக -செல்லூர் ராஜூ நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்ற கட்சி அதிமுக -செல்லூர் ராஜூ

    கோடநாடு

    கோடநாடு

    இந்த நிலையில்தான் தற்போது கோடநாடு வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒருவேளை பொதுச்செயலாளர் ஆனால் அவருக்கு எதிரான வழக்குகளை ஆளும் திமுக தோண்டி எடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. எடப்பாடி அதிமுக தலைமை பதவியை ஏற்றால்.. திமுகவிற்கு கடும் போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன.

    எடப்பாடி கோடநாடு

    எடப்பாடி கோடநாடு

    எடப்பாடியை முடக்கும் வகையில் திமுக முக்கியமான சில வழக்குகளை கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்தான் தற்போது எடப்பாடிக்கு எதிரான வழக்காக கருதப்படும் கோடநாடு வழக்கில் விசாரணை வேகம் எடுத்துள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரமாக நடத்த தமிழ்நாடு போலீஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லவும் தமிழ்நாடு போலீஸ் தயாராகி வருகிறது.

     சயான் வாக்குமூலம்

    சயான் வாக்குமூலம்

    இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் சாட்சியங்களில் ஒருவரான சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ள நிலையில்தான் அண்டை மாநிலங்களுக்கு சென்று இந்த வாக்குமூலம் தொடர்பாக விசாரணை நடத்தவும் போலீஸ் திட்டமிட்டுள்ளது.

     திட்டம் என்ன?

    திட்டம் என்ன?

    இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கிலும் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை தற்போது தீவிரம் அடைந்து.. ஒருவழியாக முடிந்துள்ளது. இந்த ஆணையம் தற்போது விசாரணையை முடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 3-ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அறிக்கை

    அறிக்கை

    இந்த நிலையில் விசாரணை அறிக்கையை பொறுத்து ஆளும் திமுக தரப்பு வழக்குகளை போடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் யாருக்கு எல்லாம் இந்த அறிக்கையால் சிக்கல் வர போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விசாரணையில் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் எடப்பாடிக்கு எதிராக புகார் எதுவும் இல்லை. அதனால் அவருக்கு பெரிதாக பிரச்சனை இருக்காது.

    புகார் எல்லாம் இல்லை

    புகார் எல்லாம் இல்லை

    இருப்பினும் விசாரணை அறிக்கை வெளியாகும் சமயத்தில் அதிமுகவில் சிலரின் தலைகள் உருளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில் இந்த அறிக்கை அந்த பதில்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி ஒற்றை தலைமையை கைப்பற்றி அதிமுகவை வலுப்படுத்த நினைக்கும் நேரத்தில்.. திமுக அரசு இப்படி அதிமுகவிற்கு செக் வைக்கும் வகையில் செயல்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

    English summary
    Kodanadu and Jayalalitha case nears climax as Edappadi Palanisamy tries to become AIADMK gen secretary. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்ச அடைந்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஒற்றை தலைமையை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X