சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேத்யூ மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடநாடு ஆவணப்படம்.. மேத்யூ மீதான வழக்கு விசாரணைக்கு தடை- வீடியோ

    சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

    கொடநாடு மர்ம கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

    இந்த ஆவணப்படத்தில் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தனர்.

    ஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் நேரில் ஆஜர்.. ஜாமீன் தொடர்பான வழக்கு 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு ஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் நேரில் ஆஜர்.. ஜாமீன் தொடர்பான வழக்கு 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    மேத்யூ, சாமுவேல்

    மேத்யூ, சாமுவேல்

    இதையடுத்து ஆவணப்படத்தை வெளியிட்ட மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதனை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்திருந்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றபோது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டதாக மேத்யூ சாமுவேல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மோதல் மூளும் சூழல்

    மோதல் மூளும் சூழல்

    ஆனால் தமிழக முதல்வருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை பரப்பி உள்ளதால், இது மோதல் மூளும் சூழலை ஏற்படுத்தும் என்பதால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    4 வார கால தடை

    4 வார கால தடை

    இருதரப்பு விளக்கத்தை கேட்டதையடுத்து, இந்த விசாரணை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இது சம்பந்தமான விசாரணை இன்று சென்னை நடைபெற்றது. விசாரமைக்குப் பின்னர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கை விசாரிக்க 4 வார கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

    English summary
    Chennai HC Ordered 4 week ban on Mathew and Samuvel's Kodanad Killing Video Case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X