சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னதான் ஆச்சு சென்னைக்கு.. பெருங்குடியை தொடர்ந்து கொடுங்கையூர்! கொழுந்து விட்டு எரிந்த குப்பை மேடு

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறியதால், அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொடுங்கையூர் குப்பைமேட்டில் ஏற்பட்ட நெருப்பால் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது. கொருக்குப்பேட்டை எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சலால் அவதிக்கு ஆளாகினர்.

Recommended Video

    பெருங்குடியை தொடர்ந்து கொடுங்கையூர்! கொழுந்து விட்டு எரிந்த குப்பை மேடு.

    சென்னையில் தினமும் சுமார் 5ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் சுமார் 2,500 டன் குப்பை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் கொட்டப்பட்ட குப்பைகளால் அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

    இந்த கிடங்கின் கிழக்கு பகுதியில் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் குப்பைகளில் தீப்பற்றத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குப்பைகளில் மளமளவென தீ பரவியது. இதன் காரணமாக அவற்றிலிருந்து அடர்புகை வெளியேறியது.

    ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்! பிளைட் வேகத்தில் ரயிலிலேயே போகலாம்! சென்னை ஐஐடி உடன் இணையும் ரயில்வே துறைஹைப்பர்லூப் தொழில்நுட்பம்! பிளைட் வேகத்தில் ரயிலிலேயே போகலாம்! சென்னை ஐஐடி உடன் இணையும் ரயில்வே துறை

     கரும்புகை

    கரும்புகை

    கொடுங்கையூர் குப்பைமேட்டில் பற்றிய நெருப்பால் கொருக்குப்பேட்டை எழில் நகர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது மேலும் புகை அதிகமாக இருந்ததால் பலருக்கும் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டது

    காட்டுத்தீயாக பரவிய நெருப்பு

    காட்டுத்தீயாக பரவிய நெருப்பு

    அதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் பத்துக்கும் மேற்பட்ட வண்டிகளில் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ மளமளவென பற்றி ஏறிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது கரும்புகை பார்ப்பதற்கு மிகப்பெரிய காட்டுத்தீ போன்று காட்சியளித்தது.

     பற்றி எரியும் நெருப்பு

    பற்றி எரியும் நெருப்பு

    சமூக ஆர்வலர்கள் பலரும் கூறும்பொழுது குப்பை கிடங்கில் அவ்வப்போது இதுபோன்று தீப்பற்றி எரிவதாகவும் குப்பைகள் அதிகரிப்பதால் ஊழியர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்தி விடுகின்றனரா அல்லது சமூக விரோதிகள் தீ வைத்து கொளுத்தி விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கண் எரிச்சல்

    கண் எரிச்சல்

    சுற்றிலும் வீடுகள் இருப்பதால் புகையினால் பலருக்கும் மூச்சுத்திணறல் கண் எரிச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இதனை மாநகராட்சி அதிகாரிகள் கருத்தில் கொண்டு இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    பெருங்குடி தீ விபத்து

    பெருங்குடி தீ விபத்து

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பெருநகர மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து 3 நாட்கள் பற்றி எரிந்தது. 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கில் 34 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

     மூச்சுத்திணறல்

    மூச்சுத்திணறல்

    குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் பெருங்குடி குப்பைக் கிடங்கில் நடைபெற்றுவருகிறது. உரம் தயாரிக்கும் பகுதியில் தீ பற்றியது காரணமாக உருவான புகை அந்த சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் பரவியது. இந்த புகையால் அந்தப் பகுதி மக்கள் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுவதற்கும் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    The fire at the Kodungaiyur landfill engulfed the surrounding area. Residents of areas including Korukkupettai Ezhil Nagar were suffering from eye irritation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X