சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருணாநிதி, ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம்.. கோபாலபுரத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகமே போர்க் கோலம் வரைகிறது... எடப்பாடி அரசுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

    சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருணாநிதி, ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளதால் கோபாலபுரம், ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு எழுந்துள்ளது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை 6 பெண்கள் வெளிப்படுத்தினர்.

    அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதை திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

     சொன்னதை செய்த கனிமொழி... வேண்டாம் CAA-NRC என வீட்டில் கோலமிட்டு எதிர்ப்பு சொன்னதை செய்த கனிமொழி... வேண்டாம் CAA-NRC என வீட்டில் கோலமிட்டு எதிர்ப்பு

    நேற்று இரவே கோலம்

    நேற்று இரவே கோலம்

    இதையடுத்து கனிமொழி தனது வீட்டிலும் இது போல் கோலம் போடுவதாக நேற்று தெரிவித்திருந்தார். நேற்று இரவே அவர் கோலம் போட்டார். அது போல் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் வேண்டாம் என்ஆர்சி, சிஏஏ என கோலமிடப்பட்டிருந்தது.

    நடைப்பயிற்சி

    நடைப்பயிற்சி

    அது போல் திமுக தலைவர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் வேண்டாம் சிஏஏ, என்ஆர்சி என கோலமிடப்பட்டுள்ளது. இதை அவ்வழியாக நடைப்பயிற்சிக்கு செல்வோர் பார்த்து வருகின்றனர்.

    நிர்வாகிகள் வீட்டிலும்

    நிர்வாகிகள் வீட்டிலும்

    எனவே சிஐடி காலனி, ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போல் திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் வீட்டிலும் இது போன்ற கோலம் போடப்பட்டுள்ளது.

    கோலம் அலங்கோலம்

    கோலம் அலங்கோலம்

    பெசன்ட் நகரில் கோலம் போட்ட பெண்களை கைது செய்தது குறித்து ஸ்டாலின் , வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்ற கேள்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கோலம் போட்டதால் கைது இல்லை, கோலத்தில் இருந்த கருத்து அலங்கோலமாக இருந்ததால் கைது என விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kolam has drawn in outside of Karnanidhi and Stalin's houses against Citizenship Amendment Act and National Register of Citizens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X