சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நமது குறிக்கோள் வெற்றி... அதுவரை யாரும் வாயே திறக்காதீர்கள்... இது தான் கூட்டணிக்கு நல்லது -ஈஸ்வரன்

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்காமல் இருப்பது கூட்டணிக்கு நல்லது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருப்பதாகவும் வெற்றி ஒன்றே குறிக்கோள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஒரு பக்கம் ராஜேஷ்.. மறுபக்கம் யோகேஷ்.. நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு பக்கம் ராஜேஷ்.. மறுபக்கம் யோகேஷ்.. நடுவில் சிக்கிக் கொண்ட "கனி".. தீராமல் தொடரும் ஜிம் காதல்!

உளவுத்துறை தூண்டல்

உளவுத்துறை தூண்டல்

திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையாக இருக்கும் போது கூட்டணி கட்சிகள் உளவுத்துறையின் தூண்டுதல்களுக்கு பதில் அளித்து ஊடக விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. திமுக கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு வலுவான கூட்டணியாக இருக்கின்றது. கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதை புரிந்து இருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வதந்திகள்

வதந்திகள்

எப்போதும் போல தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பணிகளை துவக்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு அவரவர் கட்சி சார்பில் வர வேண்டிய தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கோரிக்கைகளை வைக்க தயாராகி கொண்டிருக்கிறோம். ஊடகங்களில் வருகின்ற சில வதந்திகளுக்கு பதில் சொல்கிறோம் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிடுவது கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது போல ஊடகங்கள் பேசுவதற்கு வாய்ப்பை கொடுத்து விடுகிறது.

ஊடக விவாதம்

ஊடக விவாதம்

ஊடகங்களில் விவாதம் என்று வரும்போது கட்சிகளின் முன்னால் தேர்தல் நிலைப்பாடுகளை பற்றியும் விவாதிப்பதை தடுக்க முடியாது. எதிர்க்கட்சிகள் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முந்தைய தேர்தல்களின் நிலைப்பாடுகளையும், தலைவர்கள் பேசிய கருத்துக்களையும் விவாதித்து நம் தொண்டர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைக்க முயற்சிக்கிறார்கள்.

வெல்வோம்

வெல்வோம்

கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகை என்பதுகூட திமுகவின் வியூகங்களை பொறுத்தது. அதைப்பற்றி கூட்டணி உறுப்பு கட்சிகள் கருத்து தெரிவிப்பது சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். அதனால் நாம் முழு வெற்றி என்ற குறிக்கோள் ஒன்றை மட்டும் கவனத்தில் கொண்டு சில கருத்துக்களை தவிர்ப்பது நல்லது.

English summary
Kongu Eswaran Says, The DMK-led alliance is very strong
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X