சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'பொள்ளாச்சி'யை புறம் தள்ளும் கொங்கு மண்டலம்.. எடப்பாடி ஆட்சி கவிழ கூடாது.. அணிவகுக்கும் தலைவர்கள்!

எடப்பாடியே மீண்டும் முதல்வராக்குவதே கொங்கு மண்டல மக்களின் விருப்பம் ஆகும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி கிடக்கட்டும்...எடப்பாடி ஆட்சி கவிழ கூடாது...அணிவகுக்கும் தலைவர்கள்!

    சென்னை: "என்ன ஆனாலும் சரி.. எப்பேர்பட்ட விஷயம் பொள்ளாச்சியில் நடந்திருந்தாலும் சரி.. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழாமல் காப்பது நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்" என கொங்கு மண்டலத்தில் ஒரு குரூப் மும்முரமாக வேலைகளில் இறங்கியுள்ளதாம்.

    பொதுவாக கொங்கு மண்டலம் என்பது வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் ரசிகர்களும்கூட.

    அதனால்தான் அங்கு அதிமுக வெற்றி என்பது இவ்வளவு காலமாக எளிதாக நடக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. வீட்டுக்கு வீடு சாமி படத்துடன் எம்ஜிஆர் படத்தையும் சேர்த்தே வைத்திருப்பார்கள் இவர்கள்.

    மாதத்திற்கு 6,000 ரூபாயா?.. ராகுலின் அறிவிப்பு சாத்தியமற்றது... 'நிதி ஆயோக்' துணைத்தலைவர் கருத்து மாதத்திற்கு 6,000 ரூபாயா?.. ராகுலின் அறிவிப்பு சாத்தியமற்றது... 'நிதி ஆயோக்' துணைத்தலைவர் கருத்து

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு அதற்கான ஒரு வாய்ப்பு தெரிந்தோ, தெரியாமலோ கிடைத்துவிட்டது.

    அச்சம், கவலை

    அச்சம், கவலை

    ஆனால் தன் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகி முழுசா 5 வருஷம்கூட ஆகாத நிலையில், பாதியிலேயே அது முடிந்துவிடுமோ என்ற அச்சமும், கவலையும் கொங்கு மண்டலத்தை சூழ்ந்துள்ளது.

    பழனிசாமி

    பழனிசாமி

    அதேபோல, கிடைத்த வாய்ப்பினையும் விட்டுவிட அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை என தெரிகிறது. இதனால், வரும் தேர்தலில் எப்படியாவது எடப்பாடியையே முதல்வராக தொடர வைப்பது என்ற முடிவினை பெரும்பாலானோர் எடுத்துள்ளார்களாம்.

    வழிமுறைகள்

    வழிமுறைகள்

    இதற்கு இடையூறாக பொள்ளாச்சியில் என்ன சம்பவம் நடந்திருந்தாலும் சரி, இப்போது நடந்து வந்தாலும் சரி அதை ஒரு விஷயமாகவே எடுத்து கொள்ளாமல், எடப்பாடி ஆட்சியைக் காப்பது எப்படி, அதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பது குறித்து ஆலோசனைகளும் மிக தீவிரமாக நடந்து வருகிறதாம்.

    பொள்ளாச்சி சம்பவம்

    பொள்ளாச்சி சம்பவம்

    ஆனால் திமுகவுக்கு கொங்கு மண்டல பகுதியில் போதிய செல்வாக்கு இல்லை. அதனால்தான் என்றுமே முன்னணியில் வரமுடியாமல் உள்ளது. தற்போதுகூட பொள்ளாச்சி பிரச்சனை ஒன்றை தவிர வேறு எதையுமே பிரச்சாரத்தின்போது சொல்ல முடியாத நிலையில் திமுக உள்ளது. பார்ப்போம்.. கொங்கு மண்டலத்தை இந்த முறை கைப்பற்றுவது யார் என்று!

    English summary
    It is said that the Kongu Mandalam people want Edapadi Palanisamy to be the chief minister again
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X