சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கலைஞர்களின் பிதாமகன்.. கூத்துப்பட்டறை ந. முத்துச்சாமி மறைந்தார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கலைஞர்களின் பிதாமகன்.. கூத்துப்பட்டறை ந. முத்துச்சாமி மறைந்தார்!- வீடியோ

    சென்னை: கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

    கூத்துப்பட்டறை என்ற ஒன்றை நிறுவி தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தவர் ந.முத்துசாமி. தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். கலைஞர்களின் பிதாமகனாவார்.

    காலமானார்

    காலமானார்

    இவர் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னையில் காலமானார். இவரது கூத்துப்பட்டறையில் கலைராணி, பசுபதி, ஜார்ஜ், ஜெயராவ், ஜெயக்குமார், கருணாபிரசாத், விஜய் சேதுபதி, விமல், விதார்த், தேவி, மீனாட்சி, குரு சோமசுந்தரம், ஆனந்த் சாமி, குபேரன், சஞ்சீவி, கவின் ஜெ.பாபு, நாசர், தலைவாசல் விஜய், சண்முகராஜன் போன்றோர் ஆவர்.

    கூத்துப்பட்டறை

    கூத்துப்பட்டறை

    இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதை பெற்றார். பின்னர் 2012-ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தில் 1936-ஆம் ஆண்டு பிறந்தவர். 1957-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் தெருக்கூத்தின் மீதுள்ள ஈர்ப்பால் கூத்துப்பட்டறையை தொடங்கினார்.

    குறிக்கோள்

    குறிக்கோள்

    இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழக அரசின் விருதை பெற்றது. நுண் கலை பிரிவில் பரிசு பெற்றது. நாடக கலையை மீட்டெடுப்பதே தனது குறிக்கோள் என்றவர் முத்துசாமி.

    நாடகங்கள்

    நாடகங்கள்

    நீர்மை உள்ளிட்ட 5 நூல்களை வெளியிட்டவர் முத்துசாமி. கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களை சிறுகதைகளாக வெளியிட்டவர். காலம் காலமாக , அப்பாவும் பிள்ளையும், படுகளம் உள்ளிட்ட நாடகங்களை இயற்றிவர். முத்துசாமியின் கூத்துப்பட்டறை நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகும்.

    English summary
    Koothupattarai Na Muthusamy dies of health related issues. He was 82.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X