சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி சார் பேச வேண்டும்.. முதல்ல குரல் கொடுக்க வேண்டியது இதுக்குத்தான்.. இடித்துரைத்த ஷாநவாஸ்

சாத்தான்குளம் மரணம் குறித்து விசிக ஆளுர் ஷாநபவாஸ் கண்டன பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: "ரஜினி சார்.. சீருடைக்கு நீதி கேட்டீங்களே.. இன்று போலீசால் தாக்கப்பட்டு பலியாகியுள்ள அப்பாவிகளுக்காகவும் பேச வேண்டும்... போலீசை தாக்கிய குற்றவாளி எவரும் தப்ப முடியாது. ஆனால், யாரை தாக்கினாலும் போலீஸ் தப்பி விடுகிறது எனவே பெரும் குரல் இதற்கே தேவை!..." என்று சாத்தான்குளம் மரணங்கள் குறித்து விசிகவின் ஆளுர் ஷா நவாஸ் காட்டமான ஒரு பதிவு போட்டுள்ளார்.

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து 2 வருஷத்துக்கு சில போராட்டங்கள் நடந்தன.. இந்த போராட்டத்தை நடத்தியது தமிழ் தேசிய இயக்கங்கள்.

அந்த சமயத்தில் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.. இறுதியில் அந்த போலீஸ்காரரின் சட்டையை அந்த நபர் பிடித்துவிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. மோதலும் எழும் சூழலும் ஏற்பட்டாலும், இறுதியில் அது தவிர்க்கப்பட்டது.. அந்த நபரை போலீசார் கைது செய்து விட்டாலும், ரஜினிகாந்த் ஒரு கருத்தை சொல்லி இருந்தார்.

சாத்தான்குளத்தில் மேலும் ஒரு கைதிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதி சாத்தான்குளத்தில் மேலும் ஒரு கைதிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதி

சூழல்

சூழல்

மோதலும் எழும் சூழலும் ஏற்பட்டாலும், இறுதியில் அது தவிர்க்கப்பட்டது.. அந்த நபரை போலீசார் கைது செய்து விட்டாலும், ரஜினிகாந்த் ஒரு கருத்தை சொல்லி இருந்தார். அதில், "போலீஸ்காரர்கள் நமக்காக பாதுகாப்பு பணியில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அவர்களை சட்டையை பிடிப்பது நியாயமா? வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான்.

கலாச்சாரம்

கலாச்சாரம்

இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால், நாட்டுக்கே பேராபத்து.. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார். அதேபோல, துப்பாக்கி சூட்டு விவகாரத்திலும் காவல்துறை பக்கமே நின்று பேசியிருந்தார், பேட்டியும் தந்திருந்தார்.

லாக்-அப் மரணம்

லாக்-அப் மரணம்

இந்நிலையில், சாத்தான்குளம் மர்ம மரணம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.. போலீசார் இதை பற்றி விசாரித்து வருகிறார்கள்.. லாக்-அப் மரணம் என்று சொல்லப்படுகிறது.. அடித்தே கொன்றுவிட்டனர் என்று உயிரிழந்தோரின் குடும்பத்தினர் கதறுகிறார்கள்.. 2 மரணங்களுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

ஜாதி மோதல்

ஜாதி மோதல்

ஜாதி மோதலாகவும் உருவெடுத்து திசை திருப்பப்பட்டு வருகிறது.. கோர்ட்டே இந்த விவகாரத்தை தானாக எடுத்து விசாரித்து, கண்டிப்பும், அறிவுறுத்தியும் வருகிறது.. வழக்கும் தற்போது நடந்து வருவதால், நாம் இதை பெருமளவு விமர்சிக்கமுடியாது.. அதேசமயம், நடந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விசிகவின் ஆளுர் ஷாநவாஸ் தனது கண்டன கருத்தை பதிவிட்டுள்ளார்.. அப்போது ரஜினிகாந்த்தையும் இழுத்து வந்து வைத்து, கேள்வி கேட்டு பதிவு போட்டுள்ளார்.

குற்றவாளி

குற்றவாளி

"#IPL போராட்டத்தில் ஒரு இளைஞர் போலீசை தாக்கிய போது, சீருடைக்கு நீதிகேட்ட Rajinikanth இன்று போலீசால் தாக்கப்பட்டு பலியாகியுள்ள அப்பாவிகளுக்காகவும் பேச வேண்டும்... போலீசை தாக்கிய குற்றவாளி எவரும் தப்ப முடியாது. ஆனால், யாரை தாக்கினாலும் போலீஸ் தப்பி விடுகிறது எனவே பெரும் குரல் இதற்கே தேவை!..." என்று பதிவிட்டுள்ளார்.

ரத்தம்

ரத்தம்

மேலும், "#பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் ஏற்பட்டும், #ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும் இறந்ததாக @CMOTamilNadu அறிக்கை... ஆசனவாயில் லத்தியை சொருகி ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கினால், மூச்சுத் திணறலும் உடல்நலக் குறைவும் வரத்தானே செய்யும். எனவே, விளக்கம் வேண்டாம். நடவடிக்கை வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார்.

English summary
Kovilpatti Father and Son Death: VCK aloor shanavas condemns
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X