சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோயம்பேடு பக்கம் போய்ராதீங்க.. கிலோ பீன்ஸ் ரூ. 160க்கு விக்குதாம்.. எல்லா காய் விலையும் விர்விர்!

வெயில் காரணமாக கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கிலோ பீன்ஸ் 160 ரூபாயாம்.. கோயம்பேடு மார்கெட்டில்தான் இந்த விலை விற்கிறது. இது மட்டுமல்ல எல்லா காய்கறிகளின் விலையுமே உயர்ந்துதான் இருக்கிறது!

வெயில் அடிச்சாலும் சரி, மழை பெய்தாலும் சரி, பெட்ரோல் விலை உயர்ந்தாலும் சரி.. கடைசியில் பாதிக்கப்படுவது சாமான்ய மக்கள்தான்! அதிலும் நேரடியாக பாதிக்கப்படுவது காய்கறி விலை உயர்வினால்தான்!

Koyambedu Market Vegetables Price Increase due to Temperature

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என கிட்டத்தட்ட தென்னிந்திய மாநிலங்களில் வெயில் மண்டையை பிளக்கிறது. இதனால் காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விளைவு.. தினமும் கோயம்பேடுக்கு 10 லாரிகளில் பீன்ஸ் வந்து இறங்கும். ஆனால் இது பாதியாக குறைந்து போய், இப்போது விலையும் அதிகமாகி விட்டது. பீன்ஸ் ஒரு கிலோ விலை ரு.160 ஆக உள்ளது. இதுவாவது பரவாயில்லை. எப்போதுமே கோயம்பேட்டுக்கு ஊட்டியில் இருந்து பீன்ஸ் வரும். ஆனால் இப்போது அதுவும் வரவில்லை.

சூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு சூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ஒரு பக்கம் மழை இல்லை, இன்னொரு பக்கம் வெயில்.. இதனால் எல்லா காய்கறிகளின் விலைகளும் 25 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. தக்காளி 20 ரூபாய் இருந்தது.. இப்போது 40 ரூபாயாம்.. எல்லாமே டபுள் ஆகி விட்டது!

மே மாசம் புதிதாக காய்கறிகள் விளைந்தால்தான் இந்த விலையெல்லாம் குறையும் என தெரிகிறது! ஆனால் நல்லவேளை.. கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை அப்படியே இருப்பது நமக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது!

English summary
Rising vegetable prices in Koyambedu Market due to temperatures soar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X