சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எப்படி உடைந்து கிடந்தது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

கொரோனா மற்றும் கேரளா மழைக்கு இடையே கோழிக்கோடு விமான விபத்தும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளும் இதயத்தை உருக்கும் வகையில் உள்ளது. இந்த விமான விபத்தில் விமானத்தின் பைலட் தீபக் வசந்த் சாத்தே மரணம் அடைந்தார். அதேபோல் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் சர்மாவும் மரணம் அடைந்தார்.

கோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னர்.. அதே ஓடுதளத்தில் 2ஆவது முயற்சியில் வெற்றிகரமாக லேண்டான இன்டிகோகோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னர்.. அதே ஓடுதளத்தில் 2ஆவது முயற்சியில் வெற்றிகரமாக லேண்டான இன்டிகோ

எப்படி கிடந்தது

எப்படி கிடந்தது

இந்த நிலையில் கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எப்படி உடைந்து கிடந்தது என்பது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. விபத்துக்கு உள்ளான இந்த விமானம் நீல நிறம் கொண்ட 737 வகையை சேர்ந்த போயிங் விமானம் ஆகும். ஓடு பாதையில் இருந்து 30 மீட்டர் வழுக்கி சென்று, பள்ளத்தில் விழுந்து, அதன்பின் சுவற்றில் விமானம் மோதி உள்ளது.

சறுக்கி சென்றது

சறுக்கி சென்றது

இப்படி விமானம் தரையில் சறுக்கி சென்ற போதே அது இரண்டாக பிளந்து உள்ளது. அதன்பின் முன் பகுதி மட்டும், வேகமாக சென்று சுவரில் மோதி உள்ளது. இதனால்தான் விமானத்தின் முன் பகுதியில் இருந்தவர்கள் பலர் பலியாகி உள்ளனர். விமானத்தின் முன் பக்கம் துண்டாக சென்று 50 மீட்டருக்கும் அதிகம் சென்று அதன்பின் சுவரில் மோதி உள்ளது. வேகமாக தரையில் இறங்கியதால் விமானம் இரண்டாக பிளந்துள்ளது.

சிதறி கிடந்தது

சிதறி கிடந்தது

இந்த நிலையில் இந்த விமானம் சிதறி கிடந்தது எப்படி என்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேக்ஸர் டெக்னாலஜி (Maxar technologies) என்ற நிறுவனம் மூலம் இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. விமானம் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்ட மறுநாள் காலை இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இரண்டு துண்டு

இரண்டு துண்டு

விமானம் இரண்டு துண்டாக இந்த புகைப்படத்தில் உள்ளது. டேபிள் டாப் ஓடுதளத்தில் விமானத்தின் ஒரு பகுதி நுனியில் இருப்பதும், இன்னொரு பகுதி ஓடுதளத்திற்கு வெளியே கிடப்பதும் இந்த புகைப்படத்தில் பதிவாகி உள்ளது. விமானத்தின் உடைந்த பாகங்கள் அருகருகே சிதறி கிடைப்பதும் இதில் தெரிகிறது. தற்போது இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டு விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

English summary
Kozhikode Crash: Space firm Maxar technologies release the accident site images of Air India Express.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X