• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பொங்கல் பரிசு தொகுப்பு குளறுபடியை மறைக்க அன்பழகன் வீட்டில் ரெய்டு.. சொல்கிறார் எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் நடைபெற்றுள்ளது அதை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்கவே கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு - இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டு

  முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த ரெய்டுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அன்பழகனுக்கு ஆதரவாகவும் திமுக அரசுக்கு எதிராகவும் பேட்டி அளித்து வருகின்றனர். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசின் பழிவாங்கும் செயலாகவே இதை பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். பொய் வழக்கு அவதூறு ரெய்டு என்று திமுக அரசு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

  நிதி உதவி கொடுப்பதற்காக விளையாட்டு சங்கங்களில் நிர்வாகியாக நியமிக்காதீங்க... சென்னை ஹைகோர்ட் உத்தரவுநிதி உதவி கொடுப்பதற்காக விளையாட்டு சங்கங்களில் நிர்வாகியாக நியமிக்காதீங்க... சென்னை ஹைகோர்ட் உத்தரவு

  திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை

  திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை

  செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக முறையாக வழங்கப்படவில்லை என்பதால் கொந்தளித்துப் போய் இருக்கும் தமிழக மக்களை திசை திருப்புவதற்காக திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையினரைப் பயன்படுத்தி சோதனை நடத்தி வருகிறது அதன் அடிப்படையிலேயே முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டிலும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீட்டிலும் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  முறைகேடுகள் வெளியானது

  முறைகேடுகள் வெளியானது

  குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு முறையாக முழுமையாக வழங்கப்படவில்லை. அதனால் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக மக்கள் கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் முறைகேடுகள் குறித்து செய்திகள் பரவி வருகிறது.

  நோயை கட்டுப்படுத்தவில்லை

  நோயை கட்டுப்படுத்தவில்லை

  நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது ஆனால் நோய் பரவலை கட்டுப் படுத்தி விட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தினமும் பேட்டி மட்டும் அளிக்கிறார். கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மறைப்பதற்காக தான் கேபி அன்பழகன் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. திமுக அரசின் பழிவாங்கும் செயலாகவே இதை பார்க்கிறோம் பொய் வழக்கு அவதூறு ரெய்டு என்று திமுக அரசு செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

  மாநில தேர்தல் ஆணையம்

  மாநில தேர்தல் ஆணையம்

  ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்து வெற்றி பெற்ற அதிமுகவினரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் நேர்மையாக தேர்தலை நடத்த உத்தரவிட்டு உள்ளது எனவே வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக அரசு நேர்மையாக நடத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

  அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்

  அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்

  முதல்வர் மு க ஸ்டாலின் காலையில் எழுந்து சைக்கிள் ஓட்டி டீ குடித்து விட்டு சென்று விடுகிறார். எந்த திட்டங்களை புதியதாக அவர் கொண்டு வந்தார் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே அவர் தற்போது திறந்து வைக்கிறார். கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்தவரையில் அதிமுக ஆட்சியில் 75 கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். சேலத்தில் எடப்பாடி மேச்சேரி நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றி பாதுகாப்பான காவிரி தண்ணீரை மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

  English summary
  KP Anbalagan house Raid: ( கே.பி அன்பழகன் வீட்டு ரெய்டு இபிஎஸ் கண்டனம்) Leader of the Opposition in the Assembly Edappadi Palanisamy has accused the Anti-Corruption Department of cracking down on all former ADMK minister to cover up various irregularities in the distribution of Pongal gift packages across Tamil Nadu.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X