சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதிர்ச்சியின்மை... விரக்தி... யோகா பண்ணுங்க - கேஎஸ் அழகிரி போட்ட ட்வீட் யாருக்காக?

காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம் உண்டு என்று கூறியுள்ள கட்சித்தலைவர் கே. எஸ். அழகிரி, வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை என்று கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்து பதிவிட்ட குஷ்புவின் ட்விட்டர் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பதிவில் குஷ்புவை மறைமுகமாக சாடி பதிவிட்டுள்ளார். காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை என்று கூறியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் குஷ்பு. புதிய கல்விக்கொள்கையின் சில அம்சங்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை விமர்சித்து வரும் நிலையில் அந்த நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தது குஷ்புவின் பதிவு. இது பல சர்ச்சைகளை எற்படுத்தியது.

குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவிற்கு தாவப்போவதாக பலரும் பதிவிட்டனர். அவர்களுக்கு தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு வந்தார். சிலருக்கு காட்டமாகவும் பதிலடி கொடுத்தார் என்றாலும் பாஜக ஆதரவு பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பே... புதிய கல்விக் கொள்கை... வேல்முருகன் பாய்ச்சல்குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பே... புதிய கல்விக் கொள்கை... வேல்முருகன் பாய்ச்சல்

கே எஸ் அழகிரி ட்விட்டர் பதிவு

கே எஸ் அழகிரி ட்விட்டர் பதிவு

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தனது ட்விட்டர் பதிவில், காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை என்று கூறியுள்ளார்.

கட்சிக்குள் பேச வேண்டும்

கட்சிக்குள் பேச வேண்டும்

காங்கிரஸ் கட்சி சிறந்த ஜனநாயகக் கட்சி. இந்த கட்சிக்குள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கட்சிக்குள்ளேயே பேச வேண்டும் என்று கூறியுள்ளார் கே.எஸ் அழகிரி.

விரக்தியின் வெளிப்பாடு

விரக்தியின் வெளிப்பாடு

பொது வெளியில் பேசுவது அநாகரீகமானது Indiscipline,இது ஏன் வருகிறது என்றால் விரக்தியின் காரணமாகவே வருகிறது. இதை குணப்படுத்த யோகா சிறந்த மருந்து என்றும் கூறியுள்ளார்.

கட்சித்தலைமையுடன் மோதல் போக்கு

கட்சித்தலைமையுடன் மோதல் போக்கு

திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, அப்போதய தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தார். அவருக்கு பின்னர் வந்த திருநாவுக்கரசருடன் அவ்வப்போது மோதல் போக்கை கடைபிடித்தார். என்னதான் கட்சி பதவியில் இருந்தாலும், குஷ்பு முன்பு போல அலுவலகத்திற்கு போவதில்லை சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். இப்போது புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் குஷ்பு.

English summary
KS Alagiri Post his tweeter page, Congress is a worlds biggest Democratic political party.we can speak any controversial subject within the party foram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X