சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராத்திரியில் தூக்கம் இல்லை.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. நாங்குநேரியில் யாருப்பா நிற்கிறது?

நாங்குநேரியில் குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்று கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரியில் நிற்க போவது யார்?.. நீடிக்கும் குழப்பம்- வீடியோ

    சென்னை: ஏற்கனவே கட்டி புரண்டு உருளும் கட்சியான தமிழக காங்கிரசில் புது குழப்பமும், சர்ச்சையும் எழுந்துள்ளது. ஒருபக்கம் கராத்தே தியாகராஜனின் அதகளம் என்றால் மற்றொரு பக்கம் கே.எஸ். அழகரியின் பகீர் பகீர் பேச்சுக்கள் என காங்கிரஸ் வட்டாரமே கலகலத்து காணப்படுகிறது.

    நாங்குநேரியில் வசந்தகுமார் எம்பி ஆகிவிட்டதால், அங்கு இடைத்தேர்தல் நடக்க போகிறது. நாங்குநேரி தொகுதியானது காங்கிரசின் மண் எனப்படுவது.

    பலமுறை காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

    இந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்.. தடையால் இத்தனை கோடி இழப்பா? இந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்.. தடையால் இத்தனை கோடி இழப்பா?

    10 சீட்

    10 சீட்

    ஆனால் இந்த நாங்குநேரியில் யார் நிற்பது என்பதுதான் போட்டியாக உருவெடுத்துள்ளது. எங்களுக்கு தந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறது காங்கிரஸ். அதேசமயம், ஏற்கனவே எம்பி தேர்தலில் 10 சீட் அள்ளி தந்தாயிற்று. இப்போது சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமானால் ஒவ்வொரு சீட்டும் திமுகவுக்கு மிக முக்கியம். அதனால் நாங்குநேரியை விட்டுத்தர திமுக விரும்பவில்லை என்பது தற்போதைய சூழல்.

    உதயநிதி

    உதயநிதி

    அதற்கேற்றபடி, "இந்த தொகுதியை திமுகவுக்குக் காங்கிரஸ் விட்டுத்தந்தால் நாங்கள் எளிதாக வெற்றிப் பெற முடியும்" என்று உதயநிதி பகிரங்கமாகவே சொல்லி இருந்தார். அதுவும், திருநாவுக்கரசர் முன்னாடியே இப்படி பேசினார். இப்படி கேட்டதற்கு திருநாவுக்கரசர் கோபித்து கொள்ளக்கூடாது என்றும் உதயநிதி சொன்னார். இதற்கு திருநாவுக்கரசரும், "திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரியில் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்" என்றார்.

    நாங்குநேரி

    நாங்குநேரி

    இதுதான் காங்கிரசுக்குள் பிரச்சனையாக வெடித்தது. திருநாவுக்கரசு இப்படி சொன்னதற்கு, "திருநாவுக்கரசரின் கருத்து தனிப்பட்ட விருப்பம்" என்றார். அதாவது நாங்குநேரியை விட்டுத்தர காங்கிரசுக்கு எண்ணம் இல்லை என்பதைதான் அழகிரி நாசூக்காக வெளிப்படுத்தி இருந்தார்.

    கருத்தரங்கம்

    கருத்தரங்கம்

    ஆனாலும் திமுக தன் தரப்பில் உறுதியாக உள்ளது. நாங்குநேரியில் போட்டியிட முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. இந்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில், காமராஜர் பிறந்த நாள் விழாவை ஒட்டி, கருத்தரங்கம் நடைபெற்றது.

    டயலாக்

    டயலாக்

    அப்போது பேசிய அழகிரி ''பாரதிராஜாவின், முதல் மரியாதை படத்தில், 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று ஒரு டயலாக் வருமே.. அதுமாதிரிதான் எனக்கும்.. ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. அந்த உண்மை தெரியாததால், ராத்திரியில் தூக்கம் வருவதில்லை. ''நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளராக, குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன என்ற கேள்வி, எனக்கு எழுகிறது'' என்றார்.

    குமரி அனந்தன்

    குமரி அனந்தன்

    உதயநிதியை இதற்காகவே தயார் செய்து, புதிய பொறுப்பை தந்து, நாங்குநேரியை ஒதுக்க முடிவும் செய்து.. திமுக வேற லெவலில் நின்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அழகிரி இப்போது திடீரென குமரி அனந்தனை நாங்குநேரியில் நிறுத்தினால் என்ன என்று கேட்டுள்ளது காங்கிரசில் மட்டுமல்ல.. கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே குழப்பம் பரபரக்க தொடங்கி உள்ளது.

    English summary
    "Why not announce Kumari Anandan as a candidate in Nanguneri Constitutioin by election?" KS Azhagiri questioned
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X