சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத்துக்கு மட்டும் மோடி பிரதமரல்ல... விமர்சிக்கும் தமிழக காங்.கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி..!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக மட்டும் மோடி செயல்படுகிறார் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

Ks Azhagiri says, Modi is not the only Prime Minister for Gujarat

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''கொரோனா தொற்று பரவியது முதற்கொண்டு அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பா.ஜ.க. நடைமுறைப்படுத்தி வருகிறது.

தடுப்பூசி கொள்கையைப் பொறுத்தவரை எந்த அடிப்படையில் மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களுக்கு சலுகையும், மற்ற மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய தடுப்பூசி காலம் தாழ்ந்தும் அளிக்கப்படுகிறது.

நைட் பார்ட்டிக்கு சென்ற யாஷிகா ஆனந்த்.. காரில் அதிவேக பயணத்தால் விபத்து.. டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல் நைட் பார்ட்டிக்கு சென்ற யாஷிகா ஆனந்த்.. காரில் அதிவேக பயணத்தால் விபத்து.. டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல்

கொரோனா தொற்றினால் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலத்திற்கு சலுகை காட்டுவது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல.

இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையைத் தவிர்த்து தடுப்பூசி விநியோகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு தெளிவான கொள்கையை வகுத்து தடுப்பூசி விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.

இரண்டு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கு புரியும். இத்தகைய அணுகுமுறையை பிரதமர் மோடி கையாளுவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.

குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக மட்டும் செயல்படாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சமநிலைத் தன்மையோடு அணுகுகிற பிரதமராக மோடி செயல்பட வேண்டும். இதுவே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Ks Azhagiri says, Modi is not the only Prime Minister for Gujarat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X