சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் நீட் திணிப்பு... கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு காரணமே அதிமுக அரசின் அலட்சியம் தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு அலட்சியத்துடன் இருந்ததால் வந்த விளைவு என அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

என்ன ஷிவானி இப்படி பண்ணிட்டீங்க.. சொல்றது இல்லையா.. குப்புன்னு வியர்த்துப் போன ரசிகர்கள்! என்ன ஷிவானி இப்படி பண்ணிட்டீங்க.. சொல்றது இல்லையா.. குப்புன்னு வியர்த்துப் போன ரசிகர்கள்!

முழுவதும்

முழுவதும்

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நகரங்களில் மாணவர்களுக்கு இருக்கிற வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதற்கு எந்த வசதியும் இல்லை. நீட் தேர்வு நடத்தப்பட்டால், கடுமையாக பாதிக்கப்படப்போவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களே ஆகும்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

அதே நேரத்தில் கணக்காயர் தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. வகுப்புகளுக்கான தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீட் தேர்வை நடத்துவதில் மத்திய பா.ஜ.க. அரசு காட்டிய உறுதியின் காரணமாக உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டது.

நீட் தேர்வு திணிப்பு

நீட் தேர்வு திணிப்பு

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஏற்படுகிற பாதிப்பிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உரிய தீர்வுகளை காண முயல வேண்டும். அந்த வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நடைமுறைக்கு வருகிற நீட் தேர்வை ரத்து செய்வதற்குரிய முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வதற்கு, பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு இணைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நீட் தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் யோசனை

காங்கிரஸ் யோசனை

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும். அதைத் தடுக்கத் தவறிய எடப்பாடி அரசு உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, மிக அதிகளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

English summary
ks azhagiri says, neet exam dumped in to tamilnadu due to admk govt careless
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X