India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஞாபகம் இருக்கா...? இவர் தான் ஜி.கே.வாசன்.. லைம்லைட்டில் வந்து.. ஸ்டாலினுக்கு வைத்த திடீர் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: நீண்ட காலமாக காணாமல் போயிருந்த ஜிகே வாசன் இப்போது மீண்டும் வெளிவந்துள்ளார்.. அத்துடன் ஒரு பரபரப்பு பேட்டியை தந்து, தமிழக அரசுக்கு மிக முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

  ஞாபகம் இருக்கா...? இவர் தான் ஜி.கே.வாசன்.. லைம்லைட்டில் வந்து.. ஸ்டாலினுக்கு வைத்த திடீர் கோரிக்கை

  ஜிகே வாசனை பொருத்தவரை மிகவும் மென்மையானவர்.. நல்ல மனிதர்.. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்... யாரையும் அநாகரீகமாக பேசாதவர்.. மூப்பனாரின் வளர்ப்பு அப்படி..!

  தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.. கூட்டணி தலைமைக்கு எந்தவிதமான நெருக்கடியும் தர மாட்டார்.. அதனாலேயே தனிப்பட்ட மரியாதை எல்லா கட்சியினரிடமும் இவருக்கு இன்றுவரை இருக்கிறது.

  இன்று முதல்.. புயலென புறப்படும் ஜிகே வாசன்! கரையும் கட்சியை காப்பாற்ற முடியுமா? மாற்றி யோசிக்கனும்இன்று முதல்.. புயலென புறப்படும் ஜிகே வாசன்! கரையும் கட்சியை காப்பாற்ற முடியுமா? மாற்றி யோசிக்கனும்

  காங்கிரஸ்

  காங்கிரஸ்

  திமுகவாக இருந்தாலும் காங்கிரஸாகவே இருந்தாலும் சரி, வாசனுக்கென்று ஒரு சாப்ட் கார்னர் தமிழக அரசியல் களத்தில் இருக்கவே செய்கிறது. அதனால்தான் தமாகா தொடங்கியபோதுகூட, முக்கிய நிர்வாகிகள் வாசனை மலைபோல நம்பி வந்தனர்.. ஒருமுறை, பிரதமரை வழியனுப்ப ஜிகே வாசன் சென்னை ஏர்போர்ட் வந்தபோது மோடியால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.. அங்கிருந்த எல்லாரையும் விட்டு விட்டு, வாசனிடம் மட்டும் தனிப்பட்ட பாசத்தைக் காட்டினார் மோடி... பாஜகவினரே இதை எதிர்பார்க்கவில்லை..

  வாசன்

  வாசன்

  அதற்கு பிறகு சில தினங்களில் டெல்லிக்கும் வாசனை வரவழைத்து பிரதமர் பேசினார்... அப்போதுகூட தனக்கான பதவி, பொறுப்பு வேண்டும் என்று பிரதமரை வாசன் நிர்ப்பந்திக்கவில்லை.. ஆனால், சில கணிப்புகள் அரசியல் களத்தில் எழுந்தது.. ஒருவேளை வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படுமா? அல்லது தமாகாவை கலைத்துவிட்டு, கூண்டோடு பாஜக பக்கம் சாய போகிறாரா என்றெல்லாம் சலசலக்கப்பட்டது.. அப்படி எதுவுமே நடக்கவில்லை..

  குணம்

  குணம்

  இன்றுவரை வாசன் மீதான மரியாதையும் அப்படியேதான் தலைவர்களுக்கு இருக்கிறது.. ஆனால், தனிப்பட்ட ஒருவரின் குணத்துக்கும், கட்சி நடத்தும் திறமைக்கும் சம்பந்தம் கிடையாது என்பற்கு உதாரணமாக வாசன் திகழ்வதாக கருதப்படுகிறது.. அவரது கட்சி சறுக்கி கொண்டு போயுள்ளது.. முக்கிய நிர்வாகிகள் மெல்ல மெல்ல பிரிந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர்.. இவர் கட்சியிலும் உட்கட்சி பூசல் தலைதூக்கியது.. சீட் விவகாரம் வெடித்தது..

   இரட்டை இலை

  இரட்டை இலை

  அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா 6 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத சோக நிலைதான் ஏற்பட்டது.. 12 தொகுதிகளை கேட்டு 6 சீட்தான் கிடைத்தது.. அதிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சொன்னதை ஏற்று போட்டியுமிட்டார்.. நோட்டாவில் இருந்த பாஜககூட, வெற்றி பெற்று மேலேழுந்து வரும்போது, தமாகாவால் மட்டும் வெற்றியை எட்ட முடியாமல் சறுக்கி கொண்டிருப்பது அக்கட்சிக்கு தொடர் பின்னடைவாகி உள்ளது..

  அறிக்கைகள்

  அறிக்கைகள்

  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, வாசன் அவ்வப்போது சில பேட்டி மட்டும் தருகிறார்.. சில அறிக்கைகளை வெளியிடுகிறார்.. திமுக அரசை விமர்சிக்கிறார்.. மற்றபடி பெரிதாக அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் மறுபடியும் ஒரு பேட்டி தந்துள்ளார் ஜிகே வாசன்.. செய்தியாளர்களிடம் பேசும்போது ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

  கும்பகோணம்

  கும்பகோணம்

  "தஞ்சையை இரண்டாக பிரிக்க வேண்டும்.. கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.. காரணம், கும்பகோணம் சுற்றுலா தலம்.. லட்சக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர்.. பிரபலமான இடம்.. எனவே தனி மாவட்டமாக அறிவிக்கும் அளவுக்கு தகுதியான இடம் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலக்குமா என்று தெரியவில்லை.. ஆனால், ஜி.கே.வாசன் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் நேரம் நெருங்கிவிட்டது என்று அரசியல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள்..!

  English summary
  Kumbakonam should be declared a separate revenue district, asks TMC GK Vasan
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X