சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா?" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு

குஷ்பு கைதான சம்பவம் சோஷியல் சோடியாவில் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது உனக்கு பிடிக்கலையா?" என்று தன் பேச்சில் குறுக்கிட்ட ஒரு பெண்ணை பார்த்து குஷ்பு கேட்டதும், அதற்கு பிறகு கொஞ்சம் கேப் எடுத்து கொண்டு,மறுபடியும் முதலில் இருந்து திருமாவளவனை திட்ட தொடங்கியதும் இன்றைய குஷ்பு கைது சம்பவத்தின் ஹைலைட் ஆகும்.

Recommended Video

    'ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா?' பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு

    சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்தனர்... இதுசம்பந்தமாக செய்தியாளர்களிடம் குஷ்பு பேசினார்.

    Kushboo arrested issue memes becomes viral on socials

    அப்போது" அவரை எப்பவுமே அண்ணன் திருமாவளவன் என்றுதான் சொல்வேன்.. அந்த அளவுக்கு மரியாதை வெச்சிருந்தேன்.. ஆனால், எப்போ அவர் இவ்ளோ கேவலமான ஒரு செயலை செய்யும்போது, எப்படி அவரை வாய் திறந்து அண்ணன்னு கூப்பிட முடியும்? அண்ணன் திருமாவளவனுக்கு இனி மரியாதை கிடையாது"ஆவேசமாக சொன்னார்.

    அப்போது குஷ்பு பேச்சினை வீடியோ எடுத்து கொண்டிருந்த ஒரு பெண் திடீரென குறுக்கிட்டு, "ரிபீட்" என்றார்.. இதை பார்த்த குஷ்பு, "ஏம்மா ஃபுளோவா போய்ட்டிருக்கம்போது ரிபீட் எல்லாம் சொல்லாதே.."என்று குஷ்பு டென்ஷன் ஆகிவிட்டார்.. பிறகு கொஞ்சம் கேப் எடுத்து கொண்டு, மறுபடியும் முதலில் இருந்து திருமாவளவனை திட்ட ஆரம்பித்தார்.

    சென்னை அருகே பாஜக நடிகை குஷ்பு தங்க வைக்கப்பட்ட சொகுசு விடுதி முற்றுகை- விசிகவினர் மீது தடியடி சென்னை அருகே பாஜக நடிகை குஷ்பு தங்க வைக்கப்பட்ட சொகுசு விடுதி முற்றுகை- விசிகவினர் மீது தடியடி

    இதனிடையே சோஷியல் மீடியா முழுவதுமே குஷ்புவை ரிசார்டில் உட்கார வைத்த நிகழ்வுதான் வைராகி வருகிறது.. அவரது படங்களை வைத்து மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் ரெடி செய்துவிட்டு டிரோல் செய்து வருகின்றனர்.. குஷ்புவும் அவருடரை சுற்றி 8 பேர் என கிட்டத்தட்ட 10 பாஜகவினர் கைதாகி உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.. இதற்கு, "குஷ்புவுக்கே 10 பேர்தான் என்றால், அண்ணாமலைக்கு கூட்டம் எவ்வளவு இருக்கும்?" என்று கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மேலும், திமுகவில் குஷ்பூ இணைந்த பிறகுதான் கலைஞர் அணி ஸ்டாலின் அணி உருவானது... காங்கிரஸில் குஷ்பூ சேர்ந்த பிறகுதான் ஈவிகேஎஸ் அணி அதகளம் செய்தது.. இப்படி கோஷ்டி பூசலுக்கு காரணமான குஷ்பு, பாஜகவில் சேர்ந்த ஒரே வாரத்தில் முருகன் Vs அதர்ஸ் என்ற அணி உருவாகி விட்டதே" என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஆகமொத்தம் இன்றைய சோஷியா மீடியா முழுவதும் குஷ்புவின் செய்திகளே ஆக்கிரமித்து வருகிறது.

    English summary
    Kushboo arrested issue memes becomes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X