• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தூது"?.. டெல்லியில் கேம்ப் அடித்துள்ள குஷ்பு.. "வாங்காமல்" சென்னை திரும்ப மாட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: குஷ்பு குறித்து 2 விதமான செய்திகள் அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

முதலில் திமுகவில், பிறகு காங்கிரஸில் இருந்தவர் நடிகை குஷ்பூ.. ஆனால், எதிர்பார்த்த போஸ்ட்டிங் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். அப்போதுதான் அவரை பாஜக தன் பக்கம் இழுத்து கொண்டன.

ஆனால், அதற்கு குஷ்புவுக்கு பெரிய பதவி எதுவும் இதுவரை கட்சி வழங்கவில்லை.. இதற்கு பிறகு டெல்லியில் எத்தனையோ முறை பதவிகள், பொறுப்புகள் தமிழக தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.. அதில்கூட குஷ்பு பெயர் வரவில்லை..

பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட பெட்டர் சாய்ஸ் இல்லவே இல்லை.. அடித்து கூறும் குஷ்பு பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட பெட்டர் சாய்ஸ் இல்லவே இல்லை.. அடித்து கூறும் குஷ்பு

ஜனாதிபதி

ஜனாதிபதி

கடந்த வாரம், சில மாநில ஆளுநர்களை மாற்றியமைத்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.. இதுகுறித்து குஷ்பு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.. அதில், பெண்கள் யாருமே இந்த பதவிக்கு தகுதியில்லையா? உங்கள் கண்ணில் சிறந்த பெண்கள் யாருமே படவில்லையா? என்று குடியரசு தலைவரிடமே கேள்வி எழுப்பியிருந்தார். அப்போதுதான் குஷ்பு உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கிறார் என்பதே வெளிஉலகிற்கு தெரியவந்தது.

அதிருப்தி

அதிருப்தி

குஷ்பு அதிருப்தியில் உள்ளதை பார்த்து, இதை ஒரு குரூப் அரசியலாக்கியது.. மறுபடியும் அவர் திமுகவில் சேரவுள்ளதாகவும், தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவாலய தொடர்புகள் மூலம் ஸ்டாலினை சந்திக்க டைம் கேட்டுள்ளதாகவும், இந்த விஷயம் கேள்விப்பட்டு துர்கா ஸ்டாலின் கொந்தளித்து விட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதையடுத்து சோஷியல் மீடியாவிலும் பலரும் திரண்டு வந்து குஷ்பு திமுகவுக்கு போக போவதாக செய்திகளை ஊதி பெரிதாக்கி கொண்டிருந்தனர்.

 சாத்தியமாகும்?

சாத்தியமாகும்?

அப்படி இருந்தும் சிலர் இதனை மறுத்தனர்.. "அதெப்படி இது சாத்தியமாகும்? என் மீது செருப்பை வீசினாங்க.. முந்தானையை பிடிச்சு இழுத்தாங்க.. திமுகவில் இருக்கும் பெண்கள் அனைவரும் திட்டமிட்டு என்னை கேவலப்படுத்தி அசிங்கமாக பேசினாங்க.. ஸ்டாலின்கிட்ட புகார் சொல்ல போனார், இதை அவர் காதிலேயே போட்டுக்கல.. எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்" இப்படியெல்லாம் குற்றச்சாட்டை முன்வைத்தவர், மறுபடியும் எப்படி ஸ்டாலினை சந்திப்பார்?" என்ற கருத்துக்களும் வட்டமடித்தன.

 யூகங்கள்

யூகங்கள்

இதையடுத்துதான், குஷ்புவே வலிய வந்து இந்த யூகங்களை மறுத்துள்ளார்.. தான் கலைஞரின் பள்ளியில் இருந்து வந்துள்ளதாகவும், தன்னுடைய அரசியல் பயணம் கலைஞரின் சிறகுகளின் கீழ் தொடங்கியது என்றும் சுட்டிக்காட்டியுள்ள குஷ்பு, தற்போது வேறு ஒரு பாதையில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.. அத்துடன் தன்மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து கடுமையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்.

முகாம்

முகாம்

அதுமட்டுமல்ல, இப்போது டெல்லியிலும் முகாமிட்டுள்ளார் குஷ்பு.. இதற்கு காரணம், பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து, கட்சியில் தனக்கு முக்கிய பதவி அளிக்குமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.. இதற்கு குஷ்புவுக்கு பரவலான ஆதரவும் காணப்படுகிறது.. காரணம், இந்த முறை எம்எல்ஏ தேர்தலில் குஷ்பு எளிதாக வெற்றி பெற்றிருக்க கூடியவர்.. சேப்பாக்கம் தொகுதி இவருக்கு தரப்படுவதாக இருந்தது.

ஜெர்க்

ஜெர்க்

அதனால்தான், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னாடியே, அங்கு களமிறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.. இவர் இறங்கி வேலை பார்த்ததும் உதயநிதி கொஞ்சம் ஜெர்க் ஆனதாகவும், ஓவைசியுடன் கூட்டணி வைத்தால்தான், வெற்றி சாத்தியமாகும் என்று யோசித்ததாகவும் கூட செய்திகள் கசிந்தன.. ஆனால், திடுதிப்பென்று ஆயிரம் விளக்கு தொகுதியை குஷ்புவுக்கு ஒதுக்கிவிட்டனர்.. அக்மார்க் திமுக தொகுதி அது.. ஸ்டாலினின் தொகுதி என்றே அதற்கு பெயர்.. அங்கு சீட் ஒதுக்கப்பட்டதுமே அப்செட் ஆகி விட்டார் குஷ்பு..

கவனம்

கவனம்

இருந்தாலும் முடிந்தவரை கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.. தொகுதியின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க தினமும் பாடுபட்டார்.. குஷ்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக, உளவு துறையும் டெல்லிக்கு அப்போது தகவல் அனுப்பி கொண்டே இருந்தது.. அதற்கு பிறகுதான், அமித்ஷாவும் சென்னை வந்து, குஷ்புவை ஆதரித்து, பிரமாண்ட பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.. எனினும் தோல்வியை சந்தித்தார்.

குஷ்பு

குஷ்பு

இந்நிலையில்தான், டெல்லிக்கே சென்றுள்ளார் குஷ்பு.. அங்கேயேதான் சில நாட்களாக தங்கி உள்ளார்.. இதுவரை, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்... கட்சியில் தனக்கு முக்கிய பதவி அளிக்குமாறு குஷ்பு வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக

பாஜக

அநேகமாக ஏதாவது பதவியை வாங்கி கொண்டுதான் குஷ்பு ஊர் வந்து சேருவார் என்று தெரிகிறது.. ஆனால், பாஜகவிடம் இப்படி டிமாண்ட் செய்து கொண்டிருக்கையில், இவர் திமுகவுக்கு போக இருப்பதாக கொளுத்தி போட்டது யாராக இருக்கும் என்றுதான் தெரியவில்லை.. ஒரு வேளை அவருக்குப் பதவி ஏதும் கிடைத்து விடக் கூடாது என்று கட்சிக்குள்ளேயே சிலர் கூட இப்படி கொளுத்தி விட்டிருக்கலாம் என்று கூட சந்தேகிக்கப்படுகிறது!

English summary
Kushboo in Delhi and Will she get a new post in BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X