சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இம்ரான் கானிடம் பாடம் கற்க வேண்டும்.. குஷ்பு அதிரடி டிவீட்.. கிளம்பியது சூடான விவாதம்

இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து குஷ்பு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    குஷ்பு அதிரடி டிவீட், கிளம்பியது விவாதம்- வீடியோ

    சென்னை: அபிநந்தனை விடுவிப்பதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளது வரவேற்புடன் கூடிய சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.

    கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே பெரும் பதற்றத்தில் இருந்தன. இரு நாட்டு விமானப்படை போர் விமானங்கள் வானில் தாக்குதலை நடத்தின.

    இதில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் உலக நாடுகளே பீதி அடைந்துவிட்டன.

    [Read more: எடியூரப்பா பேச்சால் மொத்த இந்தியாவுக்கும் அவமானம்.. சரமாரி டிவீட் போட்டு கிண்டலடித்த இம்ரான் கட்சி]

    விடுவிக்க முடிவு

    விடுவிக்க முடிவு

    அபிநந்தனை விடுவிக்க பல்வேறு தரப்பில் இந்தியாவும், இந்தியாவுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளும் குரல் கொடுத்தன. இதன் விளைவாக, நல்லெண்ண அடிப்படையிலும், அமைதியை விரும்பும் நோக்கத்திலும், வீரரை இன்று விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். இது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இம்ரான்கான்

    இம்ரான்கான்

    இந்நிலையில், புல்வாமா போரில் பாஜக அரசியல் ஆதாயம் தேடி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் வேளையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, இம்ரான்கானுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் இம்ரான் கானிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பிரதமர் மோடி

    "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா? நம் பிரதமருக்கு ஒரு பாடம் மிகவும் முக்கியம்' என்று ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆவல்

    இதேபோல இன்னொரு ட்வீட்டில், "விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே.. நீங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    காழ்ப்புணர்ச்சி

    காழ்ப்புணர்ச்சி

    குஷ்புவின் இந்த இரண்டு ட்வீட்களுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாக வந்தாலும், கண்டனங்கள் கொஞ்சம் அதிகமாகவே எழுந்திருக்கிறது. பாஜக மீதான தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த இன்னொரு நாட்டை புகழ்வதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மீது குஷ்புக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருந்தாலும், அதற்காக பாகிஸ்தானை புகழ வேண்டுமா என்றும் குஷ்பு கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    அறிவுறுத்தல்

    அறிவுறுத்தல்

    "வீரரை இன்று திருப்பி அனுப்புவது இந்தியாவின் வெற்றிதான்.. இந்தியாவுக்கு அடிபணிந்துதான் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதனால் இதை நாட்டின் வெற்றியாக பார்க்கவேண்டுமே தவிர, பாகிஸ்தான் சார்பாக நின்று பார்க்க கூடாது" என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

    யாரிடம் பாடம் கற்பது?

    யாரிடம் பாடம் கற்பது?

    "காங்கிரஸ் ஆட்சியின்போது, பாகிஸ்தான் நம் இந்திய வீரரை பிடித்து வைத்து கொண்டால், கண்டிப்பாக சித்ரவதை செய்து, முகங்களை சிதைத்து, தலையையே துண்டித்தது. ஆனால் இப்போது சிறைபிடித்த 2-வது நாளே விடுவிக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம், யார் காரணம் என்பதை குஷ்பு எண்ணி பார்க்க வேண்டும் என்றும், யார் யாரிடம் பாடம் கற்பது" என்றும் கேள்விகளால் நெட்டிசன்கள் துளைத்தெடுத்து வருகிறார்கள்.

    English summary
    Congress Kushboo praised Imran Khan and she also asks PM Modi modi to learn from Pakistan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X