சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னையின் கருவறையில் கேட்டதுதான் தாய் மொழி.. ஏன் கட்டாயப்படுத்தறீங்க... குஷ்பு பொளேர் டிவீட்!

அமித்ஷாவின் இந்தி மொழி கருத்துக்கு குஷ்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு!-வீடியோ

    சென்னை: மொழியை ஏன் கட்டாயப்படுத்தறீங்க என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

    குஷ்பு அடிப்படையில் முஸ்லீமாக இருந்தாலும், உருது அவரது தாய்மொழியாக இருந்தாலும், எப்போது தமிழ்நாட்டுக்குள் வந்தாரோ அப்போதே அவரது அடையாளங்கள் காணாமல் போய்விட்டன.

    Kushboo says about Amit shahs hindi statement

    தமிழக மக்களும் குஷ்புவை வேறு இன, மத ரீதியான பெண்ணாக பார்க்கவும் இல்லை. இதற்கு காரணம் குஷ்பு தமிழை ஆர்வத்துடன் ரொம்ப சீக்கிரமாகவே பேசும் பாங்குதான்!

    ஹிந்தி மொழி திணிப்பு எந்த ரூபத்தில், எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் வந்து தன் கருத்தை ஆழமாக பதிவிடுவார் குஷ்பு.

    "இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும், ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கும் குஷ்பு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    "நான் என் தாயின் வயிற்றில் இருந்த போது கேட்ட மொழியை பேசுகிறேன். என் அம்மா எனக்கு கற்பித்த மொழியை பேசுகிறேன். ஆனால் அதன்பின்னர் குடும்பம் அன்பு மரியாதை மற்றும் அதிர்ஷ்டத்தை எனக்கு கொடுத்த மொழியை பேசுவதற்கு நான் தேர்வுகிறேன். என் குழந்தைகள் என்ன மொழி பேச வேண்டும் என்பதை நான் தேர்வு செய்கிறேன். மொழி என்பது ஒரு தேர்வாக இருக்க வேண்டும், கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

    அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா!அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா!

    ஹிந்தியை நாட்டின் பொதுமொழியாக கொண்டுவந்துதான் தீருவேன் என்று அடம்பிடிக்கும் அமித்ஷாவின் கருத்துக்கு குஷ்புவின் இந்த பதிலடியே போதுமானது!

    English summary
    Congress Person and Actress Kushboo says about Language and comment on Amitshahs hindi Statement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X