சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னா நடிப்பு?.. ஆஸ்கருக்கு போட்டியிடலாம்.. ஈஸியா ஜெய்ப்பீங்க!.. மோடியின் முடிவு குறித்து குஷ்பு

Google Oneindia Tamil News

சென்னை: சமூகவலைதளங்களை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி போட்டுள்ள ட்வீட்டிற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்களை கொண்ட உலகத் தலைவர்களில் முன்னணியில் இருப்பவர் மோடிதான். அது போல் சமூகவலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளில் முக்கியமானவரும் அவரே. அவரது ட்விட்டர் கணக்கை 5.33 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.

அதிரடி ட்வீட்

அதிரடி ட்வீட்

அது போல் பேஸ்புக்கில் 4.4 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் மோடியை பின் தொடர்கிறார்கள். அது போல் அவரது யூடியூப் பக்கத்தை 45 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஆதரவை மோடி திரட்டினார். இந்த நிலையில் நேற்றிரவு அதிரடியாக அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

போஸ்ட்

அதில் அவர் கூறுகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதற்கு பதிலாக வெறுப்பைக் கைவிடுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஆஹா மோடி நடிப்பில் நெஞ்சை தொட்டுவிட்டார். அவர் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடலாம். அப்படி போட்டியிட்டால் எந்த வித முயற்சியும் இன்றி எளிதாக அவர் வெற்றி பெறுவார். நான் சொல்வதை நம்புங்கள் என தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்துள்ளனர்.

நீங்க இருக்கீங்க

உங்களை போன்ற நடிகர்கள் எல்லாம் இருக்கும் போது எங்களால் ஆஸ்கரை பெற முடியாது என்கிறார் இந்த வலைஞர்.

ராகுலுக்கு வருடத்துக்கு ஒரு ஆஸ்கர்

உங்க கட்சி தலைவன் பப்பு க்கு வருசத்துக்கு ஒரு ஆஸ்கர் தரலாம் அந்தளவுக்கு நடிச்சி நாட்டு மக்கள ஏமாத்தறார். சுமார் ஒரு அறுபது வருசமா நாட்டு மக்கள ஏமாத்திட்டு இப்போ மோடிய நடிகன்ங்கற உங்களுக்கெல்லாம் மோடியை பற்றி பேச தகுதி இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
Congress Spokesperson Kushboo says that Narendra Modi can compete Oscar awards. He will win hands down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X