சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்டாக வேண்டும்.. குஷ்பு

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என கூறியது வருத்தம் அளிக்கிறது என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்

பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் பிரிவின் சார்பில் பொங்கல் விழா சென்னை திருவல்லிக்கேணி நடு குப்பம் பகுதியில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில்
ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து இருந்தனர்.

அதைப் பார்வையிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளர் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆபாச பேச்சு உட்பட 4 பிரிவுகளில்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்த வழக்கு.. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி ஆபாச பேச்சு உட்பட 4 பிரிவுகளில்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்த வழக்கு.. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

பெண்கள்

பெண்கள்

அப்போது அவர் கூறுகையில் தற்போது திமுகவில் பெண்களை இழிவுப்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசிவிட்டு அதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது வருத்தப்பட கூடிய விஷயமாகும். கூட்டணியில் மாநில அளவில் பெரிய கட்சியான அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இடைக்காலத் தடை

இடைக்காலத் தடை

அதில் தவறு இல்லை. தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர் நாங்கள் அறிவிப்போம் என்று சொன்னோம். ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவிக்கவில்லை. வேளாண் சட்டத்திற்கு இடைக்கால தடை பாஜகவிற்கு பின்னடைவு இல்லை.

துரித உணவு விடுதி

துரித உணவு விடுதி

திருவல்லிக்கேணி துரித உணவு விடுதியில் பாஜக பிரமுகர் தகராறு செய்த விவகாரத்தில் கட்சி சார்பாக மன்னிப்பு கோருகிறேன். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கண்டிக்கிறேன். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்மணியை அடித்தது என இது தொடர்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு

பெண்களுக்கு பாதுகாப்பு

திமுக பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொங்கல் பண்டிகை இந்துக்களுக்கானது என அர்ஜுன் சம்பத் பேசும் வாதத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நான் ஒரு முஸ்லீம். நான் பொங்கல் கொண்டாடுகிறேன்.

குஷ்பு

குஷ்பு

எந்தப் பண்டிகையையும் மதரீதியாக கொண்டாடக் கூடாது. ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிக்கும் முன்னரே நாங்கள் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம் என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

English summary
BJP Spokesperson Kushboo says that Udhayanidhi Stalin should asks apology for defaming women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X