சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோபப்படுத்திட்டீங்க.. இப்போ பாருங்க.. காங்கிரசுக்கு குஷ்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kushboo - congress clash | நடிகை குஷ்புவை கடுப்பேற்றிய காங்கிரஸ்!.. என்ன நடந்தது?- வீடியோ

    சென்னை: காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்த நடிகை குஷ்புவை கடுப்பேற்றியதன் விளைவை இப்போது அந்த கட்சி அனுபவித்து வருகிறது.

    திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் வாழ்வில் காலடி எடுத்து வைத்தவர் குஷ்பு. ஆனால், முட்டை வீச்சு போன்ற சில கசப்பான சம்பவங்களையடுத்து, அக்கட்சியிலிருந்து ஏறத்தாழ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலைக்கு வந்தார். இதையடுத்து அங்கேயிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

    காங்கிரசில் இணைந்து 4 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு குஷ்புவிற்கு வழங்கப்பட்டது.

    பேரு கெடுது.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான அப்பல்லோ வழக்கு.. அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட் பேரு கெடுது.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான அப்பல்லோ வழக்கு.. அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்

    செய்தித் தொடர்பாளர்

    செய்தித் தொடர்பாளர்

    தேசிய செய்தி தொலைக்காட்சிகளில், காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக கம்பு சுற்றி பேசி வந்தார் குஷ்பு. தேசிய அளவில் கிடைத்த இந்த அறிமுகத்தின் மூலம், தனக்கு 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் குஷ்புவிற்கு சீட் தரவில்லை காங்கிரஸ் மேலிடம். இப்போது காங். தலைவராக ராகுல் காந்தி உள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்த்தார்.

    திருச்சி தொகுதி

    திருச்சி தொகுதி

    காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் கிடைத்துள்ளன. இருந்தும், குஷ்புவிற்கு சீட் கிடைக்கவில்லை. குஷ்பு தனக்கு திருச்சி தொகுதி வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. நடிகையாக இருந்தபோது குஷ்புவிற்கு சில வெறியான ரசிகர்கள், கோயில் கட்டியது திருச்சி பக்கத்தில்தான். ஆனால், குஷ்புவிற்கு திருச்சி தரப்படவில்லை.

    யாருக்கு கொடுத்தாங்க பாருங்க

    யாருக்கு கொடுத்தாங்க பாருங்க

    திருச்சியை குஷ்புவிற்கு தராதது மட்டுமின்றி, அவருடன் பனிப்போர் நடத்தும் முன்னாள் காங். தலைவர் திருநாவுக்கரசருக்கு திருச்சியை கொடுத்து அழகு பார்த்தது காங்கிரஸ் தலைமை. இதனால் உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகியுள்ளார் குஷ்பு. தமிழ்நாட்டில் பிரச்சாரமே செய்யப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம். ஸ்டார் பரப்புரையாளர்கள் பட்டியலில் குஷ்பு பெயர் இடம் பெற்றிருந்தும் அவர் இதுவரை பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

    குவியும் புகார்கள்

    குவியும் புகார்கள்

    பிரச்சாரம் ஓய இன்னும் இரு வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், குஷ்புவின் புறக்கணிப்பு பற்றி காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார்கள் தட்டி விடப்பட்டுள்ளன. காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களுக்காக பிரச்சாரம் செய்ய வருமாறு, குஷ்புவை அழைத்தால், அவரோ படப்பிடிப்பு, சீரியல் சூட்டிங்குகளில் நான் ரொம்ப பிஸி என கூறி வந்தவர்களை திருப்பியனுப்பிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கொந்தளிப்பு நிலவுகிறது.

    ட்விட்டரில் கூட பேச மாட்டேங்கிறாரே

    ட்விட்டரில் கூட பேச மாட்டேங்கிறாரே

    அட.. அவர் பிஸியாக எப்பவுமே கருத்து சொல்லும் ட்விட்டரில் கூட சமீபத்தில் அவர் தமிழக காங்கிரஸ்காரர்கள் குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. படங்களை ப்ரமோஷன் செய்யும் வேலை செய்து வருகிறார். மற்ற நாட்களில் கூட அரசியல் பேசும் குஷ்பு, இப்போது தேர்தல் காலத்தில் அதை பேச மறுப்பதை வைத்தே அவர் எந்த அளவுக்கு அதிருப்தியில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

    English summary
    Kushboo sundar is avoiding making campaign for Congress in Tamilnadu as she didn't got seat to contest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X