சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து குஷ்பு ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "என்னது.. நீதி, நேர்மை, நியாயம், தர்மம், ஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.." என்று நடிகை குஷ்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் முதல் சட்டசபை வரை எப்போது பேசினாலும், ஊழல் இல்லாத ஆட்சி என்றுதான் பேசி வருகிறார்.

Kushboo tweet about CM Edapadi Palanisamy

அதேபோல, சென்ற வாரம் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், நீதி.. நீதி.. என்றே பேசினார்.

அதாவது, "நீதி, நேர்மையை சிறப்பாக கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது... நீதிக்கு தலைவணங்கும் மாநிலம்தான் தமிழகம்... நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுகிறது... என்று புகழ்ந்து பேசியிருந்தார். இந்நிலையில், இதற்கெல்லாம் சேர்த்து நடிகையும், காங்கிரசின் செய்தி தொடர்பாளருமான நடிகை குஷ்பு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து போட்ட பதிவு இதுதான்: "முதல்வர் பேசுவதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. நேர்மை, நியாயம், தர்மம், ஊழல் இல்லாத ஆட்சி.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க? ஒரு முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள்தான். நீங்கள் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. எங்கள் மீது திணிக்கப்பட்டவர் நீங்கள்" என்று கூறியுள்ளார் குஷ்பு.

அருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம் அருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்

குஷ்புவின் இந்த டிவீட்டுக்கு சரமாரியாக கண்டனங்களும், பதில்களும் குவிந்து வருகின்றன. ஒருவர், அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை என்று இருக்கலாம். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்எல்ஏ. ஆனால் உங்களை எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ பரிந்துரைக்கக் கூட ஆள் இல்லையே அதற்கென்ன சொல்கிறீர்கள் என்று சாடியுள்ளார்.

English summary
Actress and Congress person Kushboo has criticized CM Edapadi Palanisamy and his government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X