சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்குன்னா தக்காளி சட்னியா.. குஷ்பு கோபக் கேள்வி

ரயிலில் அன்று கைப்பற்றப்பட்ட 560 கோடி ரூபாய் யாருடையது என குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "2 வருஷத்துக்கு முன்னாடி லாரியில் 560 கோடி பிடிச்சாங்களே.. அது என்னாச்சுன்னு, யார் பணம்னு சொன்னாங்களா? உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

காட்பாடியில் நடந்த சோதனையில் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது என்றும், அந்த பணம் எல்லாம் திமுக பிரமுகர் சீனிவாசன் வீடு, குடோன்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி காலையில் இருந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.

Kushboos opinion about Katpadi raid

இன்னும் சோதனையும் தீவிரமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இது சம்பந்தமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தன் கருத்தை சொல்லி உள்ளார்.

அப்போது அவர் சொன்னதாவது: அதிகாரிகள் நடத்தட்டும்.. வேணாம்னு சொல்லலை. கைப்பற்றின பணம் கண்டுபிடிச்சு சொல்லட்டும்.. தப்பில்லை!

ஆனா 2 வருஷத்துக்கு முன்பு லாரியில் 560 கோடி ரூபாய் பிடிச்சாங்களே? அது என்ன ஆச்சு? அந்த பணம் யாருடையது? எங்கே இருந்து வந்தது? இது எதுவுமே இதுவரைக்கும் சொல்லவே இல்லையே.

வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியபோது ஒரு அமைச்சர் எல்லா டாக்குமென்டையும் தூக்கிக்கொண்டு எல்லார் கண் முன்னாடியும் ஓடினாரே.. அந்த ஆவணம் என்ன ஆவணம்? அது யாராவது இதுவரைக்கும் கண்டுபிடிச்சாங்களா?

கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வேலூர் சிமென்ட் ஆலை யாருடையது? வெளியான பரபரப்பு தகவல் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வேலூர் சிமென்ட் ஆலை யாருடையது? வெளியான பரபரப்பு தகவல்

ஏன் அதை மட்டும் மறைக்கணும்? உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இந்த விஷயத்தில் எல்லாம் தேர்தல் கமி‌ஷன் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

English summary
Congress Kushboo has commented on the raid in Katpadi and she has questioned about Rs 560 Crore of money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X