சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சங் பரிவாரங்களால் ஓட விடப்பட்டீர்களே.. மறந்துட்டீங்களா குஷ்பு.. நினைவூட்டும் பெரியாரிஸ்டுகள்!

Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு ஐக்கியமாகிவிட்டார். ஆனால் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இதே பாஜகவின் சங் பரிவாரங்களால் இஸ்லாமியர் என்ற ஒற்றை காரணத்துக்காக விரட்டி விரட்டி மிரட்டல்களுக்குள்ளானபோது நாங்கள்தானே குஷ்புவுக்கு ஆதரவாக இருந்தோம் என்பதை மறந்துவிட்டதை நினைவுபடுத்துகிறோம் என்கின்றனர் பெரியாரிஸ்டுகள்.

கற்பு விவகாரம்: கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டர் குஷ்பு

இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பரிமளா ராசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: குஷ்புவுக்கு சில சம்பவங்களை நியாபகப்படுத்த விரும்புகிறோம்.

குஷ்புவால் திமுக-காங்.-க்கு இம்மி சேதாரமும் இருக்காது-பாஜகவுக்கும் அம்மஞ்ஜல்லி பிரயோசனமும் கிடையாது!குஷ்புவால் திமுக-காங்.-க்கு இம்மி சேதாரமும் இருக்காது-பாஜகவுக்கும் அம்மஞ்ஜல்லி பிரயோசனமும் கிடையாது!

இந்தியா டுடே கற்பு பிரச்சனை

இந்தியா டுடே கற்பு பிரச்சனை

2005 ம் ஆண்டு இந்தியா டுடே இதழுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பற்றிய பேட்டியில் கற்பு பற்றி குஷ்பு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்பொழுது தமிழகம் முழுவதும் இதே பாஜக சங் பரிவார அமைப்புகள் குஷ்புவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி குஷ்புவை வழக்கமான தங்கள் பாணியில் மிக கேவலமாகவும் இழிவான சொற்களால் அர்ச்சனை செய்தார்கள். குஷ்புவின்வீட்டின் முன் குவிந்த பாஜக ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி கும்பல் செருப்பு துடைப்பம் ஆகியவற்றைக் காட்டி மிகவும் இழிவு படுத்தினார்கள் மிரட்டல் விடுத்தார்கள். அவரை தாக்க முயற்சித்தார்கள்.

கண்டித்த கொளத்தூர் மணி

கண்டித்த கொளத்தூர் மணி

அந்த நெருக்கடியான சூழலில் அவருக்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் பெரியாரிஸ்டுகள் தான் நின்றார்கள். பேசினார்கள். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் குஷ்புவின் கருத்துரிமைக்கு எமது வலிமையான ஆதரவைத் தெரிவித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அவரை இழிவுபடுத்தும், தாக்க முயற்சிக்கும் இந்துத்துவ சக்திகளை கண்டித்தார்.

பாகிஸ்தானுக்கு ஓடிப் போ

பாகிஸ்தானுக்கு ஓடிப் போ

குஷ்பு மீது இதே பாஜக கும்பல் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வழக்கு தொடுத்து அவரை அலைக்கழித்தனர். பாஜக சங்பரிவாரக் கும்பல்களின் இந்த கீழ்த்தரமான தாக்குதலில் நிலைகுலைந்த குஷ்பு பத்திரிகையாளர்கள் முன் கண்ணீர் விட்டு கதறினார். குஷ்புவை முஸ்லிம் என்றும் நீ பாகிஸ்தானுக்கு ஓடிப்போ என்று இதே பாஜக சங்பரிவார கும்பல் சொன்னதை குஷ்பு மறந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறோம்.

திரைப்பட விழா சர்ச்சை

திரைப்பட விழா சர்ச்சை

குஷ்புவின் மீது பாஜக சங்பரிவார கும்பலுக்கு எப்பொழுதும் ஒரு வெறுப்பு இருந்து வந்தது. பிறகு ஒரு திரைப்பட துவக்க விழாவில் இந்து கடவுள் படத்தின் முன்பு குஷ்பு கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தார் என்கின்ற ஒரு காரணத்தை காட்டி மீண்டும் அவரை இதே பாஜக சங்பரிவார கும்பல் மிக கேவலமாகவும் ஆபாசமாகவும் மிரட்டும் துணியிலும் பேசியது. அப்பொழுதும் பெரியாரிஸ்டுகள் தான் குஷ்புவுக்கு ஆதரவாக நின்றார்கள். எந்த பாஜகவில் குஷ்பு இணைகிறார் ?

அந்த பாஜகவிலா?

அந்த பாஜகவிலா?

1) குஷ்புவின் பிறப்பை இழிவுபடுத்தி பேசிய 2) குஷ்புவை ஒரு முஸ்லிம் என்றும், நீ பாகிஸ்தானிற்கு ஓடிப்போ என்றும் மிரட்டிய 3) குஷ்புவின் வீட்டின் முன் செருப்பு துடைப்பத்தை வைத்து குஷ்புவை தாக்க முயற்சித்த 4) குஷ்புவை மிரட்டி ஆபாசமாக பேசிய 5) தமிழகம் முழுவதும் குஷ்புவின் மீது வழக்குத் தொடுத்து அலைக்கழித்து கண்ணீர் விட்டு கதற வைத்த பாஜக RSS கும்பலில் இணையப் போகிறாராம்.

குஷ்புவுக்கு அனுதாபங்கள்

குஷ்புவுக்கு அனுதாபங்கள்

குஷ்புவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், பெண்களை இழிவாக நடத்தச் சொல்லும் மனுதர்மவாதிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை செய்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள், சட்டமன்றத்தில் நீலப்படம் பார்க்கும் பாஜக எம்எல்ஏக்கள், இப்படி நாட்டிற்கும்,பெண்களுக்கும் பெரும் ஆபத்தாய் விளங்கும் ஒரு கட்சியில் நீங்கள் இணைவது என்பது இந்த நாட்டிற்கு,பெண் இனத்திற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். உங்களை வாழ வைத்த தமிழ்நாடு என்று வசனம் பேசும் குஷ்புவே , தமிழ்நாடு பெரியார் மண் உங்களை வாழவைத்த இதே தமிழ்நாடு நீங்கள பாஜக சங்க்பரிவார கும்பலோடு இணைந்து வரும் பொழுது வாழவைத்தே இதே தமிழ்நாடு உங்களை குப்பைத்தொட்டியில் வீசவும் தயங்கது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் ! இவ்வாறு திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி பரிமளா ராசன் பதிவு செய்துள்ளார்.

English summary
Here is Actor Kushbu's forgotton stories on Clash with Hindutva Outfits in Tamilnadu for recent years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X