சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரை பற்றிய நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு.

மேலும், ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன மாற்றங்களை செய்திருப்பார் என்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தியை பற்றி தங்கபாலு தெரிவித்ததாவது;

ஹய்யா.. சீரியல் ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைச்சுருச்சு.. இனியாவது புது சீனா போடுங்க எசமான்!ஹய்யா.. சீரியல் ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைச்சுருச்சு.. இனியாவது புது சீனா போடுங்க எசமான்!

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் தொழில்நுட்பம்

''இளைய பாரதத்தை கட்டி எழுப்பியவர் ராஜீவ் காந்தி, அவர் கொண்டு வந்த திட்டங்களால் தான் இன்று இந்தியா இந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ராஜீவ்காந்தி தான் அடித்தளமிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில் நுட்ப மேம்பாடு மிக அவசியம் என்பதை அன்றே அடையாளம் கண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார் ராஜீவ்காந்தி.

சுதந்திரம்

சுதந்திரம்

ராஜீவ்காந்தியை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவரை போல் தன்னலமற்ற தலைவரை பார்க்க முடியாது. தனது நலத்தை பற்றி ஒரு நாளும் அவர் சிந்தித்தது கிடையாது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் ராஜீவ்காந்தி மிக உறுதியுடன் இருந்தார். சுதந்திர இந்தியா உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க வேண்டும் என எண்ணியவர்.

இளைஞர்கள் நலன்

இளைஞர்கள் நலன்

ராஜீவ்காந்தி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தார் என்றால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்திருக்கும். அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். புதிய இந்தியாவில் வறுமை இருக்கக்கூடாது, அரசியல், வேலைவாய்ப்பு, உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் ஏற்றம் பெற வேண்டும் என சிந்தித்து செயல்பட்டவர் ராஜீவ் காந்தி. இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்தவர் அவர்.

புதுமைகள்

புதுமைகள்

ராஜீவ் காந்தி மட்டும் மறையவில்லை என்றால் இந்நேரம் ஏழ்மையும்; வறுமையும் இல்லாத இந்தியாவை உருவாக்கியிருப்பார். சமூக பொருளாதார திட்டத்தில் புதுமையைக் கொண்டு வந்தார். இந்தியா தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் ராஜீவ். அவரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம்'', என்று தனது எண்ண ஓட்டங்களையும், ராஜீவை பற்றிய நினைவலைகளையும் தங்கபாலு பகிர்ந்துள்ளார்.

English summary
Kv thangabalu says, If Rajiv Gandhi had been alive, he would have made India a superpower
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X