சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தல படத்தில் ஓபனிங் சாங் எழுதனும்... பெண் ஆட்டோ டிரைவர் விருப்பம்.. வைரல் வீடியோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    தல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை -வைரல் வீடியோ!

    சென்னை: அஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கோலமாவு கோகிலா புகழ் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பெண் ஆட்டோ டிரைவர் விருப்பம்

    இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் அஜித்தின் படத்துக்கு ஓபனிங் பாடல் எழுத வேண்டும் என்று பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர் விருப்பப்பட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆட்டோ டிரைவராக பணி

    ஆட்டோ டிரைவராக பணி

    சுமார் 2 நிமிடங்கள் அந்த வீடியோவில் அப்பெண் பேசுகிறார். அவர் கூறுகையில் நான் புதுக்கோட்டையில் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறேன். என் பெயர் சரோஜா.

    அஜித்திடம் கொடுக்கனும்

    அஜித்திடம் கொடுக்கனும்

    அஜித்தின் ஆரம்ப பாடலை (ஓபனிங் சாங்) எழுத வாய்ப்பு கேட்டு புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோவில் சென்னைக்கு பயணம் செய்தேன். அஜித்தை பற்றி 2 பாடல்களும் கவிதை புத்தகம் ஒன்றும் எழுதி வைத்திருக்கிறேன். அதை அஜித்திடம் கொடுக்க வேண்டும்.

    வித்தியாசமாக இருக்கும்

    வித்தியாசமாக இருக்கும்

    அஜித்தின் படத்தில் எனது பாடல் இடம்பெற்றால் அதை நான் செய்த பாக்கியமாக நினைக்கிறேன். ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன். கண்டிப்பாக தல குறித்த எனது பாடல்கள் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Lady auto driver wants to write opening song in a Ajith film. She travels from Pudukkottai to Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X