சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்

பெண் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் இறுதி சடங்கு நடந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    Woman police officer lends a shoulder to her colleague’s last journey

    சென்னை: பெண்கள் எல்லாரும் சேர்ந்து சடலத்தை தூக்கி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியுடன் பரிமாறப்பட்டு வருகிறது. உயிரிழந்தது ஒரு பெண் போலீஸ்.. சடலத்தை தூக்கி சென்றவர்கள் சக பெண் காவலர்கள்!

    சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி.. இவர் பிடிலீ. செங்கல்வராய நாயகரின் கொள்ளுப்பேத்தி ஆவார். 48 வயது.. சின்ன வயசில் இருந்தே போலீஸ் ஆகணும் என்று வெறியாய் இருந்தவர்.. விளையாட்டில் ஆர்வம் நிறைந்தவர்..

    lady inspector cremated with full honours

    கடந்த 91-ல்தான் போலீஸ் வேலையில் சேர்ந்தார். தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்த ஸ்ரீதேவிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

    கர்ப்பப்பையில் புற்றுநோய் வந்துவிட்டது. அதனால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதேவி கடந்த 11- தேதி இறந்துவிட்டார். அவரது இறுதி அஞ்சலி ராயபுரத்தில் நடந்தது. அப்போது சென்னை நகரின் காவல்துறையினர் பெரும்பாலானோர் ஸ்ரீதேவிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். முக்கியமாக வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, சடலத்தைமுதல் ஆளாக தூக்கினார்.

    இதையடுத்து மற்ற பெண் போலீசாரும் ஸ்ரீதேவியின் உடலை தோளில் சுமந்து காசிமேடு மயானம் வரை சென்றனர். 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் செய்யப்பட்டது. காவல்துறையில் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பிலும் இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதை பற்றி கேட்டதற்கு, துணை கமிஷனர் உட்பட எல்லோருமே சொன்ன ஒரே பதில், "ஸ்ரீதேவிக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம்?" என்றதுதான். இப்போது வீடும், அந்த ஸ்டேஷனும் ஸ்ரீதேவியின் சத்தம் இல்லாமல் அடங்கி கிடக்கிறது!

    English summary
    lady inspector sridevi died due to cancer and cremated with full honours in chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X